புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆபரேசன் தாமரை! நேற்று பீகார்.. அடுத்து புதுச்சேரி - பகீர் கிளப்பும் எதிர்க்கட்சித் தலைவர்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமிக்கும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் நிலையே ஏற்படும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்து உள்ளார்.

Recommended Video

    பீகாரைத் தொடர்ந்து புதுச்சேரி: BJPக்கு அடுத்த செக்? Politics Today With Jailany

    புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனின் உரையுடன் தொடங்கியது. இதில் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு காவல்துறை தரப்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

    அப்போது உரையாற்றிய தமிழிசை, "புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட தனிநபர் வருமான அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு ரூ.10,416 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.9,709 கோடி என 94 செலவிடப்பட்டு உள்ளது.

    பீகார் முதல்வராக 8-வது முறையாக பதவியேற்று கொண்டார் நிதிஷ்குமார்.. துணை முதல்வரானார் தேஜஸ்விபீகார் முதல்வராக 8-வது முறையாக பதவியேற்று கொண்டார் நிதிஷ்குமார்.. துணை முதல்வரானார் தேஜஸ்வி

    காங்கிரஸ், திமுக எதிர்ப்பு

    காங்கிரஸ், திமுக எதிர்ப்பு

    அப்போது தமிழிசை சவுந்திரராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். தமிழிசை தனது உரையை தொடங்கியவுடன், காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று, "தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டவுடன் மகிழ்ச்சியடைந்தோம். கூடுதல் நிதி கிடைக்கும், அரசு நிறுவனங்கள் திறக்கப்படும் என எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.

     வெளிநடப்பு

    வெளிநடப்பு

    பிரதமர் மோடியை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து கூடுதல் நிதி மற்றும் மாநில அந்தஸ்டு கேட்டு உள்ளார். அதன் பின்னர் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கிடைக்கவில்லை என்று கூறி அவர்கள் திமுக எம்.எல்.ஏக்களுடன் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா செய்தியாளர்களை சந்தித்தார்.

    ரங்கசாமிக்கு நிதீஷ் நிலை

    ரங்கசாமிக்கு நிதீஷ் நிலை

    அப்போது பேசிய அவர் "புதுச்சேரிக்கு தேவையான நிதியை வாங்கித்தராமல், வளர்ச்சிக்கு எதிராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அரசியல் செய்து வருகிறார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். பீகார் முதலமைச்சராக இருந்த நிதீஷ்குமாரின் நிலை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் பாஜகவால் ஏற்படும். நிதீஷ் குமாரைபோல் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்."

    நாராணசாமி குற்றச்சாட்டு

    நாராணசாமி குற்றச்சாட்டு

    கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் ஆள தகுதி இல்லாதவர்கள் பதவி விலகிட வேண்டும். புதுச்சேரியின் சூப்பர் முதலமைச்சராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும், முதலமைச்சர்களாக அனைத்து அமைச்சர்களும் உள்ளார்கள். ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் என்.ஆர்.காங்கிரஸ் அரசில் அதிகரித்து உள்ளது." என்றார்.

    தமிழிசை விளக்கம்

    தமிழிசை விளக்கம்

    இதற்கு பதிலளித்த தமிழிசை, "ஆளுநர் வேறு துணை நிலை ஆளுநர் வேறு. துணை நிலை ஆளுநருக்கு சில முடிவுகளை எடுக்க கூடிய அதிகாரம் இருக்கிறது. நானும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் இணைந்து பணியாற்றுகிறோம். நாராயணசாமியால் இணைந்து பணியாற்ற முடியவில்லை. நாங்கள் இணைந்து பணியாற்றுவது அவருக்கு வாட்டுகிறது. ஆதனால் இப்படி பேசிகிறார். இருவருக்கு இடையே ஈகோவை உருவாக்க நினைக்கிறார். அது முடியாது. மக்களுக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம்." என்றார்.

    English summary
    Puducherry opposition leader Shiva warnd that Bihar situation in Puducherry Rangasamy: முதலமைச்சர் ரங்கசாமிக்கும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் நிலையே ஏற்படும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்து உள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X