புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காசி யாத்திரை.. கொரோனாவால் முடக்கப்பட்ட புதுச்சேரி யாத்ரிகர்கள்.. ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு..

Google Oneindia Tamil News

புதுச்சேரி: காசிக்கு ஆன்மிக யாத்திரை சென்ற புதுச்சேரியைச் சோ்ந்தவா்களை பாதுகாப்பாகச் சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என்று அவா்களது உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended Video

    காசி யாத்திரை.. கொரோனாவால் முடக்கப்பட்ட புதுச்சேரி யாத்ரிகர்கள்.. ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு..

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுச்சேரி அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    Puducherry people Spiritual journey from Puducherry to Kashi

    இந்நிலையில்புதுச்சேரி நெல்லித்தோப்பு சத்யா நகரைச் சோ்ந்த 22 போ் வாராணசிக்கு ஆன்மிக யாத்திரையாக கடந்த 19 ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து ரயில் மூலம் சென்றனா். மீண்டும் புதுக்சேரிக்கு திரும்ப 29 ஆம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனா். இதனிடையே அவா்கள் அனைவரும் கடந்த 21 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசிக்குச் சென்ற நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    கொரோனா.. மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும்.. கலக்கும் திருச்சி மாநகராட்சி! கொரோனா.. மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும்.. கலக்கும் திருச்சி மாநகராட்சி!

    இதனை தொடா்ந்து அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டன. அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் அவா்கள் கடந்த ஒரு வாரமாக அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனா். மேலும் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனா். தங்களுடைய நிலையை விளக்கும் விதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டு புதுச்சேரியில் உள்ள தங்களது உறவினா்களுக்கு அனுப்பியுள்ளனர்.

    Puducherry people Spiritual journey from Puducherry to Kashi

    இதையடுத்து அவா்களது உறவினா்கள் ஆன்மிக யாத்திரை சென்றவா்களை பாதுகாப்பாக மீட்டு புதுச்சேரிக்கு கொண்டு வர முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை உடனடியாக ஏற்ற முதலமைச்சர் நாராயணசாமி, வாராணசியில் சிக்கித் தவிப்போருக்கு உடனடியாக உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களைப் பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.

    இதனிடையே இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் உத்திரபிரதேச மாநிலம் சோனாப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த ஆட்சியரை தொடர்புகொண்டு, காசி யாத்திரைக்கு சென்ற குழுவினருக்கு தங்கும் வசதி, மருத்துவ பரிசோதனை மற்றும் தென்னிந்திய உணவு வகைகளும் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் அங்குள்ள குழுவினருக்கு தென்னிந்திய உணவு வகைகள் வழங்கப்பட்டன. மேலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின் அக்குழுவினர் பாதுகாப்பாக புதுச்சேரி திரும்ப எல்லாவித உதவியும் செய்வதாக சோனாப்பூர் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

    English summary
    Puducherry peoples Spiritual journey from Puducherry to Kasi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X