புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அருமையான சேவை.. கொரோனா பணி சூப்பர்.. இந்தாங்க ரோஜா.. சபாஷ் புதுச்சேரி போலீஸ்!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Recommended Video

    அருமையான சேவை.. கொரோனா பணி சூப்பர்.. இந்தாங்க ரோஜா.. சபாஷ் புதுச்சேரி போலீஸ்! - வீடியோ

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க புதுச்சேரியில் கடந்த திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மின்துறை உள்ளிட்ட 11 துறைகளை தவிர மற்ற அரசு துறை ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

    Puducherry police congratulate doctors with a roses

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் இரவு பகல் பாராமல் பணிபுரிந்து வருகின்றனர்.

    Puducherry police congratulate doctors with a roses

    புதுச்சேரி கோரிமேடு காசநோய் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை, தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனி படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் தனியாக ஒரு மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.

    புற ஊதா கதிர்கள் vs கொரோனா வைரஸ்.. அமெரிக்கா, இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே நல்ல செய்தி புற ஊதா கதிர்கள் vs கொரோனா வைரஸ்.. அமெரிக்கா, இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே நல்ல செய்தி

    இதற்காக அரசின் காசநோய் மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை ஆகிய இரண்டும் கொரோனாவிற்காக மட்டும் சிகிச்சை அளிப்பதற்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

    Puducherry police congratulate doctors with a roses

    இந்நிலையில் கோரோனா வைரஸ் பரவாமல் இருக்கும் வகையில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணி செய்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசர் பணிக்கு செல்லும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து ஊக்குவித்தனர். தொடர்ந்து தங்களது சேவையை பாராட்டிய போலீசாருக்கு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றி தெரிவித்தனர்.

    English summary
    In Puducherry, the police congratulated the doctors and nurses with a rose flower.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X