புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுச்சேரியில் 81% வாக்குப் பதிவு.. 2014ம் ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு!

Google Oneindia Tamil News

Recommended Video

    புதுச்சேரியில் வாக்குப் பதிவு, விடிவுகாலம் பிறக்கும் என நாராயணசாமி பேட்டி- வீடியோ

    புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய மக்களவை தேர்தல் மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இரவு 8 மணியளவில் கிடைத்த தகவலின்படி அங்கு லோக்சபா தேர்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    காமராஜர் நகர் தொகுதிகுட்பட்ட வெங்கட்டா நகர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த ஒரு வாக்குப்பதிவு மையத்தில் மட்டும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கூடுதலாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    Puducherry registers 81% polling

    புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 970 வாக்குப்பதிவு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் சீல் வைக்கப்பட்டு, புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு பாதுகாப்பு மையங்கள் என மொத்தம் 5 பாதுகாப்பு மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி மக்களவை தேர்தலில் மாலை 8 மணி நிலவரப்படி 80.95 சதவீதம் அதாவது 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் அங்கு 82 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த முறை ஒரு சதவீதம் குறைந்துள்ளது.

    இதேபோல் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 69.89% வாக்குகள் பதிவானது.

    English summary
    Puducherry has registered 81% polling in Loksabha elections and it is one percent less than 2014 LS polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X