புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள் கொடுங்க.. நாராயணசாமி வேண்டுகோள்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: கொரோனா வைரசை கட்டுப்படுத்த
மாநிலங்களுக்கு தேவையான நிதியுதவி மற்றும் மருத்துவ உபகரணங்களை உடனடியாக மத்திய அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா தொற்றை பொறுத்தவரை அனுபவ ரீதியாக பல தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் சுமார் 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது பெரிய கவலையை தருகிறது. புதுச்சேரியில் உள்ள 33 பேரில் 32 பேருக்கு கரோனா தொற்று அறிகுறி இருந்தாலும் அவர்கள் திடகாத்திரமாக உள்ளனர். அவர்கள் உடல் நலம் தேறி வருகிறது. வியாதி உள்ளவர்களின் உயிருக்கு மட்டும் கொரோனா தொற்று ஆபத்து ஏற்படும் என்றும், கொரோனா தொற்று நோயானது இன்னும் 2 மாதங்களுக்கு மிகப்பெரிய அளவில் பரவும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர்.

ஜெ. பாணியில் திமுகவை மாற்ற பிகே திட்டமா? நூதனக் கொள்கையால் தலைவர்களிடையே ஏமாற்றம்ஜெ. பாணியில் திமுகவை மாற்ற பிகே திட்டமா? நூதனக் கொள்கையால் தலைவர்களிடையே ஏமாற்றம்

மே மாதம்

மே மாதம்

இதனை யோசித்து பார்க்கும் போது, இனி வரும் காலங்களில் மாநில அரசு என்ன செய்ய வேண்டும், மே மாதம் 31 ம் தேதியுடன் ஊரடங்கு காலம் முடிகிறது. அதன் பிறகு மத்திய அரசின் நிலை என்ன? என்று எந்தவித தகவலும் நமக்கு வரவில்லை. மத்திய அரசு ஒருபுறம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு உதவ வேண்டும். இன்னொரு புறம் பொருளாதாரம் மேம்பட உதவ வேண்டும். ஆனால், இரண்டையும் மத்திய அரசு செய்யவில்லை.

புதுவை

புதுவை

பக்கத்து மாவட்டங்களான விழுப்புரம், கடலூரில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் புதுச்சேரியில் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பதால் மத்திய அரசு நமக்கு கிடைக்க வேண்டிய நிதி ஆதாரம் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொடுக்கவில்லை. தற்போது காரைக்கால், ஏனாம் பச்சை மண்டலமாகவும், புதுச்சேரி, மாகே ஆரஞ்சு மண்டலமாக உள்ளது.

உள்துறை அமைச்சர்

உள்துறை அமைச்சர்

இந்த நிலையில் தேவையான மருத்துவ உபகரணங்கள் இருந்தால்தான் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். எனவே, மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய மருத்துவ உபகரணங்களை அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
அதேபோல் மாநிலத்துக்கு தேவயைான நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

சோனியா காந்தி

சோனியா காந்தி

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் காணொலி காட்சியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், மாநிலங்களுக்கு அதிகாரத்தை மத்திய அரசு பகிர்ந்து அளிக்க வேண்டும், மாநிலங்களுக்கு தேவையான நிதி ஆதாரத்தை கொடுக்க வேண்டும், ஏழை மக்களின் வங்கி கணக்கில் முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் போட வேண்டும், அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.7.500 என்ற முறையில் 5 மாதங்கள் போட வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான நிதியுதவி அளித்து அவர்களது வாழ்வாதாரம் மேம்பட உதவ வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர்.

முதல்வர்

முதல்வர்

மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தால் மிகப்பெரிய அளவில் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு உடனடியாக மாநிலங்களுக்கு நிதியுதவி, மருத்துவ உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

English summary
Puducherry state chief minister V.Narayanasamy press conference regarding coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X