புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிரண்பேடி தொல்ல தாங்கல.. சட்டப்பேரவையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சுகாதாரத் துறை அமைச்சர்..

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக கூறி கருப்பு உடை அணிந்து சட்டமன்ற வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    கருப்பு உடை அணிந்து சட்டமன்ற வளாகத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தர்ணா - வீடியோ

    ஆந்திர மாநிலம் கோதாவரி அருகே புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் உள்ளது. இந்த தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் மல்லாடி கிருஷ்ணாராவ்.

    Puducherry state health minister Malladi Krishnarao Dharna against Kiran bedi

    இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த இரண்டு வருடங்களாக அரசின் திட்டங்களுக்கான கோப்புகளை அனுப்பி வைத்தால் அதை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றார். அரசு அதிகாரிகள் துணைநிலை ஆளுநரின் பேச்சை கேட்டு அரசுக்கு ஒத்துழைப்பதில்லை.

    மற்ற நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஏன் நேரில் சென்று சந்திக்கவில்லை.

    Puducherry state health minister Malladi Krishnarao Dharna against Kiran bedi

    புதுச்சேரி மாநில பிராந்தியமான ஏனாமில் இருந்து பிற மாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் ஊரடங்கால் 16 நாட்கள் நடந்தே வந்துள்ளனர். அவர்களை வைரஸ் பரிசோதனை செய்து ஏனாம் பகுதிக்கு அனுமதிக்காமல் எல்லையில் தடுத்து நிறுத்த அதிகாரிகளுக்கு கிரண்பேடி உத்தரவிட்டுள்ளதாகவும், தன்னை பழிவாங்கும் நோக்கில் இது போன்ற செயல்களில் கிரண்பேடி ஈடுபடுவதாக தெரிவித்திருந்த அமைச்சர், அடுத்த 24 மணி நேரத்தில் ஏனாமில் அனுமதிக்கவில்லை என்றால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    காசு எடுக்கனுமா.. வீட்டிற்கே வரும் ஏடிஎம்.. புதுவை பாரதியார் கிராம வங்கியின் புது முயற்சி!காசு எடுக்கனுமா.. வீட்டிற்கே வரும் ஏடிஎம்.. புதுவை பாரதியார் கிராம வங்கியின் புது முயற்சி!

    இந்நிலையில் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட 14 தொழிலாளர்களை எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக குற்றம்சாட்டியும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் சபாநாயகர் சிவகொழுந்துவிடம் கிரண்பேடி மீது புகார் மனு அளித்து, கருப்பு சட்டை அணிந்து சட்டமன்ற வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

    அமைச்சரின் தர்ணா போராட்டம் காரணமாக சட்டப்பேரவையில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    English summary
    Puducherry state health minister Malladi Krishnarao Dharna against Kiran bedi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X