புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்-அவுட் கலாச்சாரத்தை விமர்சனம் செய்த பாஜகவா இது.. ரூல்சை மீறி.. புதுச்சேரியில் திடீர் கட்-அவுட்கள்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் பேனர் மற்றும் கட்டவுட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையையும் மீறி பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, ஆளுயர பேனர் மற்றும் சாலை நடுவில் பாதுகாப்பின்றி பாஜகவினர் ஆர்ச் வைத்துள்ளனர். இதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Recommended Video

    கட்-அவுட் கலாச்சாரத்தை விமர்சனம் செய்த பாஜகவா இது.. ரூல்சை மீறி.. புதுச்சேரியில் திடீர் கட்-அவுட்கள் - வீடியோ

    புதுச்சேரி மாநிலத்தில் பேனர் மற்றும் கட்டவுட்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பாஜக சார்பில் இன்று பிற்பகலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார். இதையொட்டி புதுச்சேரி மாநிலம் நகரப்பகுதி முழுவதும் சாலைகளின் ஓரத்தில் பிரதமர் மோடியை வரவேற்று ஆளுயர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    Puducherry taking banner culture ahead of PM Narendra Modi arrival

    மேலும் சாலைகளின் நடுவே பிரம்மாண்ட ஆர்ச்சும் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ச்சு போதிய பாதுகாப்பு இல்லாமல் கயிரால் கட்டப்பட்டுள்ளது. பலத்த காற்று அடித்தில் விழும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி மக்களின் நலனையும், வாகனஓட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் அரசியல் கட்சியினர் வைத்துள்ள பேனர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    Puducherry taking banner culture ahead of PM Narendra Modi arrival

    திராவிட கட்சிகள்தான் பேனர்கள் வைப்பதாக விமர்சனம் செய்து வந்தது பாஜக. இப்போது அந்த கட்சியும் அதையேத்தான் செய்கிறது என்கிறார்கள் மக்கள்.

    English summary
    In the wake of Prime Minister Narendra Modi's visit to Puducherry despite the ban on banners and cut outs, the BJP has placed an arch and banners in the middle of the road. The public and motorists have demanded that this be disposed of immediately.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X