புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த டிரஸ்ஸோடு உள்ளே வராதே .. ஸொமாட்டோ டெலிவரி பாயை விரட்டிய மால் ஊழியர்கள்.. வைரல் வீடியோ

ஆடையை காரணம் காட்டி டெலிவரி பாயை மாலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸொமாட்டோ டெலிவரி பாயை விரட்டிய மால் ஊழியர்கள்.. வைரல் வீடியோ

    புதுச்சேரி: "முதல்ல வெளியே போ.. இந்த மாதிரி டிரஸ் போட்டுட்டு இங்க எல்லாம் வரக்கூடாது" என்று டெலிவரி பாய் ஒருவரை ஷாப்பிங் மாலில் இருந்து வெளியேற்றிய அவலம் நடந்துள்ளது!

    இப்போதெல்லாம் ஆன்லைன் டெலிவரிக்குதான் மவுசு அதிகம். ஆனால் அந்த பொருட்களை கொண்டு வந்து தரும் "டெலிவரி பாய்ஸ்"கள் நிலைமையோ பரிதாபம்தான்! சொன்ன நேரத்திற்கு கொண்டு போய் பொருளை சேர்ப்பதில் இவர்கள் வெயில், மழை என பார்க்காமல் வேலை பார்ப்பவர்கள்.

    ஆனால் அவர்களை கொஞ்சம்கூட மதிக்காமல் கேவலமாக நடத்தப்படும் அவலம் ஆங்காங்கே நடந்து வருகிறது. இப்படித்தான் புதுச்சேரியில் நடந்துள்ள சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.

    ஸொமாட்டோ ஊழியர்

    ஸொமாட்டோ ஊழியர்

    அது ஒரு ஷாப்பிங் மால்! அதற்குள் ஸொமாட்டோ நிறுவன ஊழியரான இளைஞர் ஒருவர் உள்ளே செல்கிறார். ஆனால் அங்கிருந்த ஒரு நபர் அவரை தடுத்து நிறுத்துகிறார். அந்த நபர் அந்த ஷாப்பிங் மாலில் வேலை பார்ப்பவர் போல தெரிகிறது. டிப்-டாப்பாக டிரஸ் பண்ணி இருக்கிறார்.

    ஏன் தடுக்கறீங்க?

    ஏன் தடுக்கறீங்க?

    இளைஞரை தடுத்து நிறுத்தி "உள்ளே எல்லாம் போகக்கூடாது" என்கிறார். அதற்கு அந்த இளைஞரோ, "ஏன், நான் ஏன் போகக்கூடாது, சாப்பாடு டெலிவரி எடுக்க உள்ளே போறேன்... என்னை ஏன் தடுக்கறீங்க?" என்கிறார். "இல்லை.. நீ போகக்கூடாதுன்னு சொன்னா கேளு" என்கிறார்.

    பார்க்கிங் இல்லை

    பார்க்கிங் இல்லை

    அதற்கு இளைஞர், "அதான் ஏன்னு கேட்கறேன்.. இங்கு வர்றவங்களுக்கு நீங்க பார்க்கிங் கூட தர்றது கிடையாது" என்கிறார். அதற்கு அந்த மால் ஊழியர் "அப்படி எல்லாம் இல்லையே.. உன்னை மாதிரி ஆளுங்களுக்கு மட்டும்தான் பார்க்கிங் தர்றது இல்லை" என்கிறார்.

    உங்க கஸ்டமர்தான்

    உங்க கஸ்டமர்தான்

    இதைக்கேட்டதும் இளைஞருக்கு அதிர்ச்சியும், கோபமும் ஏற்படவும்,"ஏன்.. அப்படி என்ன நாங்கள் செஞ்சுட்டோம்... உங்களுக்கு டெலிவரி பார்ட்னர்ஸ் நாங்கள்தான்.. எங்களால்தான் உங்களுக்கு வியாபாரம் ஆகுது. எங்களை ஏன் பிரிச்சு பாக்கறீங்க? இதோ.. இந்த டீ ஷர்ட்டை கழற்றினால் நானும் உங்க கஸ்டமர்தான்" என்றார்.

    வெளியே போ

    வெளியே போ

    அதற்குள் இன்னொரு மால் ஊழியர் ஓடிவந்து, "உன்னை யார் உள்ளே வர சொன்னது? உன் ஆர்டரே வேண்டாம்.. முதல்ல வெளியே போ" என்று வலுக்கட்டாயமாக அனுப்புகிறார். இளைஞரோ, "நானும் டிகிரி ஹோல்டர்தான்.. என்னை ஏன் உள்ளே விட மாட்டேன்றீங்க" என்று பலமுறை சத்தமாக சொன்னாலும், மாடியிலிருந்து கீழே அழைத்து வந்து கடைசியில் இளைஞரை வெளியேற்றியே விட்டார்கள். இந்த வீடியோதான் வைரலாகிறது. டிரஸ்ஸை காரணம் காட்டி வெளியேற்றப்பட்டதை கண்டு பொதுமக்கள் கொதித்து போய் உள்ளனர்.

    English summary
    Zomato Company Delivery Boy forced go out in Puducherry Shopping mall
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X