புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீயும் நானுமா.. 68 வயது வைத்திலிங்கத்திற்கு எதிராக 29ஐ களம் இறக்கிய ரங்கசாமி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Puducherry Vaithilingam: நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி வைத்தியலிங்கம் போட்டி- வீடியோ

    புதுச்சேரி: புதுச்சேரி அரசியல் களம் படு வித்தியாசமாக களை கட்டியுள்ளது.

    புதுச்சேரி லோக்சபா தேர்தலில் யார் போட்டியிடுவார்கள் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில் பழம் பெரும் காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கத்தை காங்கிரஸ் வேட்பாளராக்கயுள்ளது. மறுபக்கம் என். ஆர். காங்கிரஸ் ஒரு வித்தியாசமான வேட்பாளரை களம் இறக்கியுள்ளது.

    29 வயதேயான இளைஞர் கே. நாராயணசாமிதான் என். ஆர். காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த திமுக எம்எல்ஏ கேசவனின் மகன் ஆவார். மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறார். பெரும் பணக்காரர், அதேசமயம், அரசியல் அனுபவம் இல்லாதவர்.

    கே.நாராயணசாமி

    கே.நாராயணசாமி

    அதிமுக கூட்டணில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி தனியார் விடுதியில் கூட்டணி கட்சி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அறிமுக செய்து வைத்தார். அதன்படி மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தனியார் மருத்துவ கல்லூரியின் அதிபரான 29 வயதுடைய இளைஞரான கே.நாராயணசாமி புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி வைத்தியலிங்கம் போட்டி.. சபாநாயகர் பதவியை உதறினார்!நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி வைத்தியலிங்கம் போட்டி.. சபாநாயகர் பதவியை உதறினார்!

    இளைஞர் வர்றார் வழி விடுங்க

    இளைஞர் வர்றார் வழி விடுங்க

    வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தபின் பேசிய என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்பதாலும், முதியவர்களை விட இளைஞர்கள் சுறு சுறுப்பாக இருப்பார்கள் என்பதால், புதுச்சேரி மக்களவை தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளராக நல்ல ஒரு இளைஞரான நாராயணசாமியை நிறுத்தியுள்ளதாக கூறினார்.

    தட்டாஞ்சாவடிக்கு யாரு

    தட்டாஞ்சாவடிக்கு யாரு

    ரங்கசாமி மேலும் கூறுகையில், தகுந்த நேரத்தில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து தர வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. எங்களுடைய வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இன்று நண்பகல் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாராயணசாமி 12.10 மணியளவில் மாவட்ட வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

    அனுபவம் இல்லாதவர்

    அனுபவம் இல்லாதவர்

    என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமி மருத்துவர் என்பதும், மிக குறைந்த வயதில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படுகிற வேட்பாளர் ஆவார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணியில் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார். மற்றபடி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நாராயணசாமிக்கு அரசியல் அனுபவம் கிடையாது என்பது குறிப்பிடதக்கது.

    English summary
    NR Congress has fielded 29 year old K Narayanasamy against Congress veteran R Vaithilingam in Puducherry LS polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X