புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாராயணசாமி போட்டது டிராமா.. நாங்க ஆட்சிக்கு வந்தா புதுச்சேரி மாநிலமாகும்.. ரங்கசாமி!

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்க ஆட்சிக்கு வந்தா புதுச்சேரி மாநிலமாகும்: ரங்கசாமி!- வீடியோ

    புதுச்சேரி: மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றே தீருவேன் என புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி உறுதி.

    மேலும் ஆளுநர் மாளிகை முன்பு கருப்பு சட்டை அணிந்து முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் நடத்திய போராட்டம் நாடகம் எனவும் ரங்கசாமி குற்றம்ச்சாட்டியுள்ளார்.

    Rangasamy slams Narayanasamy for staging drama in the UT

    புதுச்சேரி மாநிலத்தின் பிரதான எதிர்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடவுள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான ரங்கசாமி ரெட்டியார்பாளையத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    நீ.. வா.. போ.. நிருபர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா.. பிரஸ் மீட்டில் கொந்தளித்த பத்திரிக்கையாளர்கள் நீ.. வா.. போ.. நிருபர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா.. பிரஸ் மீட்டில் கொந்தளித்த பத்திரிக்கையாளர்கள்

    இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து என்ற கோரிக்கையை முன்வைப்போம் என்றும், கடந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த திட்டங்களை தற்போது ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை.

    Rangasamy slams Narayanasamy for staging drama in the UT

    இதை மக்களின் முன் வைப்போம் என்று தெரிவித்த ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையை கட்சி தொடங்கியது முதல் வலியுறுத்தியே வந்தோம். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றியே வந்துள்ளது என்றும், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றே தீருவோம் என்றும் உறுதியாக தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய ரங்கசாமி, மத்திய அரசுடன் மோதல் போக்குடன் செயல்பட்டே வந்த மாநில காங்கிரஸ் அரசு, ஆளுநர் மீது குற்றம் சொல்லி என்ன பயன் என்றும், மேலும் ஆளுநர் மாளிகை முன்பு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டது நாடகம் என்றும், இது ஆளும் அரசுக்கு அழகல்ல என்று தெரிவித்த அவர், தேர்தல் தேதி அறிவித்தவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என ரங்கசாமி தெரிவித்தார்.

    English summary
    NR Congress president Rangasamy has slammed CM Nayrayanasamy that he has enacted a drama against LT Governor Kiran Bedi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X