புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த எல்லைக்கும் சென்று போராட தயார்.. நாராயணசாமி

Google Oneindia Tamil News

புதுவை: புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலினை செய்ய உள்ளதாக, மாநில முதல்வர் நாராயணசாமி தகவல் தெரிவித்துள்ளார்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது இந்நிலையில்

Ready go to protest any border to stop the hydrocarbon project .. Narayanaswamy

புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது

Ready go to protest any border to stop the hydrocarbon project .. Narayanaswamy

மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் அண்ணா சிலையிலிருந்து காமராஜர் சிலை வரை சுமார் 1 கி.மீ தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் - திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

Ready go to protest any border to stop the hydrocarbon project .. Narayanaswamy

மனி சங்கிலி போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்தனர். இதேபோல் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Ready go to protest any border to stop the hydrocarbon project .. Narayanaswamy

போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக கூறினார் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் பரிசீலினை செய்வதாக கூறியுள்ளதாக தெரிவித்தார்

Ready go to protest any border to stop the hydrocarbon project .. Narayanaswamy

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த எந்த எல்லைக்கும் சென்று போராட தயாராக உள்ளளேன். பாராளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என தெரிவித்துள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு நீதிமன்றத்தை அனுக உள்ளதாக கூறினார்.

English summary
The Union government is considering a proposal to abandon the hydrocarbon project in Puducherry, state chief minister Narayanasamy said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X