புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவிலிருந்து வரும் பறவைகள்.. கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து.. பொதுமக்களே உஷார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனவை சீனா உருவாக்கியதா ? உண்மை என்ன?

    புதுச்சேரி: புதுச்சேரியில் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்யும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    ஆஸ்திரேலியா, சைபீரியாவில் இருந்து சீனா வழியாக புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளை வேட்டையாடி உண்பதால், கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

    புதுச்சேரியில் பாதுகாக்கப்பட்ட பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்வதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இப்பணியில் வனத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி 50 க்கும் மேற்பட்ட வன ஆர்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறை தீவிர நடவடிக்கை எடுத்தாலும், பறவைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வரும் நிலைதான் புதுச்சேரியில் இருந்து வருகிறது.

    இது என்னப்பா அக்கிரமம்? அருணாசலபிரதேசத்துக்கு அமித்ஷா போவதால் சீனாவுக்கு காண்டாம் இது என்னப்பா அக்கிரமம்? அருணாசலபிரதேசத்துக்கு அமித்ஷா போவதால் சீனாவுக்கு காண்டாம்

    புதுவைக்கு வரும் சீனப் பறவைகள்

    புதுவைக்கு வரும் சீனப் பறவைகள்

    குறிப்பாக உள்நாட்டு பறவைகளான கொக்கு, நொல்ல மடையான், நாரை உள்ளிட்ட பறவைகளும், மத்திய ஆசிய நாடுகள், மேற்கத்திய நாடுகள், ஆஸ்திரேலியா, சைபீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிக்மி கூஸ்(Pygmy goose), பார் ஹெட்டட் கூஸ்(Bar-Headed goose), காட்டன் பிக்மி கூஸ் (Cotton Pygmy goose) உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் புதுச்சேரியில் உள்ள உசுட்டேரி பறவைகள் சரணாலயம், பாகூர் உள்ளிட்ட ஏரிகளுக்கு இந்த பருவகாலத்தில் அதிகளவில் வருகை தரும்.

    ஆபத்து

    ஆபத்து

    அதுமட்டுமின்றி, இங்கேயே சில மாதங்கள் தங்கியிருந்து இனப்பெருக்கம் செய்துவிட்டு செல்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வருகை தரும் இந்த பறவைகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தாலும், இந்த பறவைகளால் தற்போது ஆபத்து ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் வெளிநாட்டு பறவைகளை சமூக விரோதிகள் இறைச்சிக்காக வேட்டையாடி, விற்பனை செய்வதுதான்.

    சீனாவிலிருந்து வருவதால்

    சீனாவிலிருந்து வருவதால்

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், புதுச்சேரிக்கு ரஷ்யா, மத்திய ஆசியா போன்ற நாடுகளில் இருந்து சீனா வழியாக வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. தற்போது சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா என்ற கொடிய வைரஸ் நோய் விலங்குகள் மூலம் தான் பரவியதாக கூறப்படுகின்றது. அவ்வாறு அந்த விலங்குகளின் ஒட்டுன்னிகள் பறவைகளுக்கு எளிதாக தொற்ற வாய்ப்புள்ளது.

    சாப்பிட்டால் ரிஸ்க்

    சாப்பிட்டால் ரிஸ்க்

    பறவைகள் புதுச்சேரிக்கு வந்து செல்வதால் எந்தபாதிப்பும் இல்லை. ஆனால் அதை வேட்டையாடி, அறுத்து உண்ணும்போதுதான் கொரோனா போன்ற தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சமூக விரோதிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்தாலும், அவற்றை பொதுமக்கள் வாங்கக் கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    வேட்டையாடுவதை தவிருங்க

    வேட்டையாடுவதை தவிருங்க

    இதையும் மீறி பறவைகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் அவற்றை உணவிற்காக வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது. மேலும் பறவைகளை வேட்டையாடுபவர்களுக்கு 7 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இதுபோன்று பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பலை வனத்துறை பிடிப்பதில்லை.

    சீரியஸாக பிடிங்கப்பா

    சீரியஸாக பிடிங்கப்பா

    மீறி அவ்வாறு பிடித்தால் குறைந்த அளவு பறவைகளை மட்டுமே வனத்துறை வழக்குக்காக பிடித்து வருகின்றார்கள் என்றும், வேட்டையாடுபவர்களை தப்பிக்க விட்டு விடுகின்றார்கள் என சமூக ஆர்வலர்கள் குற்றம்ச்சாட்டுகின்றனர். ஆகவே இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    English summary
    Environmentalists have warned that there is a risk of transmission of Corona virus by birds which are flowing from China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X