புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொகுசு காரில் ரூ. 6 லட்சம் பணம்..முன்னுக்குப் பின் முரண் பேச்சு.. சிக்கினார் பெட்ரோல் பங்க் ஓனர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சொகுசு காரில் ரூ. 6 லட்சம் பணம்..முன்னுக்குப் பின் முரண் பேச்சு.. சிக்கினார் பெட்ரோல் பங்க் ஓனர்! -வீடியோ

    புதுச்சேரி: புதுச்சேரி அருகே கணக்கில் வராத ரூ. 6.68 லட்சம் பணத்துடன் சென்ற பெட்ரோல் பங்க் உரிமையாளரை தடுத்து நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற லிங்காரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கிருஷ்ணராஜ் என்பவரின் சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    Rs. 6.68 lakh cash recovered in Puducherry

    முன்னாடி சிரிக்கிறாங்கே.. பின்னாடி 'ஆப்போடு' அலையாறாங்கே.. என்னாக போகுதோ.. கலக்கத்தில் வேட்பாளர்கள்முன்னாடி சிரிக்கிறாங்கே.. பின்னாடி 'ஆப்போடு' அலையாறாங்கே.. என்னாக போகுதோ.. கலக்கத்தில் வேட்பாளர்கள்

    அப்போது கிருஷ்ணராஜ் தன்னிடம் ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே இருப்பதாக முதலில் கூறினார். பின்னர் ஒரு லட்சம் இருப்பதாக மாறி மாறி பேசியதை தொடர்ந்து, கார் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக 6 லட்சத்து 68 ஆயிரம் பணம் சிக்கியது.

    Rs. 6.68 lakh cash recovered in Puducherry

    அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், பணத்தை வானூர் கிளைக் கருவூலத்தில் ஒப்படைத்தனர். அதிகளவிலான பணம் காரில் கொண்டு செல்லப்பட்டது குறித்து கிருஷ்ணராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Rs. 6.68 lakh cash recovered in Puducherry

    உரிய கணக்கை காட்டினால் பணம் கிருஷ்ணராஜிடம் ஒப்படைக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தேர்தல் பறக்கும் படையினர் வளைத்து வளைத்துப் பணத்தைப் பறிமுதல் செய்வது குறிப்பிடத்தக்கது.

    Rs. 6.68 lakh cash recovered in Puducherry
    English summary
    Election flying squad officials have seized Rs. 6.68 lakh cash from a petrol bulk owner in Puducherry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X