புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி

எஸ்.பி. பாலசுப்ரமணியன் மறைவு கலை உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

புதுச்சேரி: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். எஸ்.பி. பாலசுப்ரமணியன் மறைவு கலை உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திரையுலகினர் மட்டுமன்றி அரசியல் தலைவர்களும் விளையாட்டு வீரர்களும் இரங்கல்கள் தெரிவித்தனர். எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு பேசிய நடிகர் அர்ஜுன் பேசும்போது, "எஸ்பிபிக்கு கண்டிப்பாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்" என்று தெரிவித்திருந்தார்.

SP Balasubrahmanyam deserves Bharat Ratna says CM Narayanasamy

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, "இந்திய கலாச்சார பரிமாணம் குறித்த ஆராய மத்திய கலாச்சார துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து இந்த குழுவில் யாரையும் சேர்க்காதது கண்டிக்கதக்கது. ஆகவே அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களையும் குழுவில் இடம் பெற வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

எஸ்.பி. பாலசுப்ரமணியன் மறைவு கலை உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன் வந்துள்ளனர். அனைத்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நாராயணசாமி இதுவரை முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.9 கோடி வந்துள்ளது என்று கூறினார்.

ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் 5 ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளனர். நம் மாநிலத்தில் 15 லட்சம் பேர் உள்ளனர். ஆய்வின்படி, 3 லட்சம் நபர்களுக்கு கொரோனா வர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மக்கள் ஒத்துழைக்க வில்லை என்று கூறியுள்ளார்.

English summary
Puducherry Chief Minister Narayanasamy has said that the Central Government should give the Bharat Ratna award to the late playback singer SB Balasubramaniam. S.P. He also said that the demise of Balasubramanian was a great loss to the art world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X