புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஸ்கி விலை ஏறிப் போச்சு.. சாராயத்தை ஊத்து.. காரைக்காலுக்குப் படையெடுத்த குடிகாரர்கள்!

Google Oneindia Tamil News

காரைக்கால்: தமிழகத்திலும் சரி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சரி விஸ்கி, பிராந்தி ஆகிய வெளிநாட்டு மது ரகங்களின் விலையை உயர்த்தி விட்டதால் காசுப் பற்றாக்குறை உள்ள குடிகாரர்கள் சாராயத்திற்கு மாறி வருகின்றனர்.

தமிழக எல்லையையொட்டியுள்ள புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் திறக்கப்பட்டுள்ள சாராயக் கடைகளுக்கு தமிழக குடிகாரர்கள் படையெடுத்து வந்து பாட்டில் பாட்டிலாக சாராயத்தை வாங்கி குடிக்கிறார்களாம்.

ஊரடங்கு இன்னும் முழுமையாக அகற்றாத நிலையில் கோர்ட்டுகளின் உத்தரவுடன் மதுக் கடைகளை தமிழக அரசு திறந்து வைத்துள்ளது. இதனால் குடிகாரர்கள் கடைகளுக்குப் படையெடுத்து அரசுக்கு அள்ளிக் கொடுத்தபடி உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தைப் போலவே தற்போது புதுச்சேரியிலும் கடைகளைத் திறந்து விட்டுள்ளனர்.

3 மாதமாக ஆராய்ச்சி செய்கிறோம்.. கொரோனா மரணங்களுக்கு இதுதான் காரணம்.. விஜயபாஸ்கர் சொன்ன விளக்கம்!3 மாதமாக ஆராய்ச்சி செய்கிறோம்.. கொரோனா மரணங்களுக்கு இதுதான் காரணம்.. விஜயபாஸ்கர் சொன்ன விளக்கம்!

வரி உயர்வு

வரி உயர்வு

61 நாள் ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் கொரோனா வரியுடன் புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காரைக்காலில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் மது பானக்கடைகள் காலை 10 மணி அளவில் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டன. வரி உயர்வு காரணமாக மது விலை கடுமையான உயர்வைக் கண்டிருந்தது. புதுச்சேரியில் சாராயக் கடைகளுக்கும் அனுமதி உண்டு என்பதால் அவற்றையும் திறந்துள்ளனர்.

சாராயத்தை ஊத்து

சாராயத்தை ஊத்து

அரசின் விலை உயர்வால் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட மதுபானங்கள் தமிழகத்திற்கு இணையான விலையில் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஒயின்ஷாப்பில் விஸ்கி பிராந்தி வாங்குவதை தவிர்த்தனர். இதன் காரணமாக காரைக்கால் மற்றும் தமிழகத்தின் நாகப்பட்டினம் ஆகியவற்றுக்கு இடையே எல்லையாக உள்ள வாஞ்சூரில் அமைந்துள்ள தனியார் மதுபான கடைகள் குடிகாரர்கள் இன்றி காற்று வாங்கின.

காரைக்கால் சாராயம்

காரைக்கால் சாராயம்

அதேசமயம், காரைக்காலில் இன்று சாராயக்கடைகளும் திறக்கப்பட்டதால் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த குடிகாரர்கள், நாகை, பனங்குடி கருவைகாட்டு வழியாக சாராயக் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர். இதனால் வாஞ்சூரில் உள்ள 4 சாராயக் கடைகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து குடிகாரர்களை ஒழுங்குபடுத்தினர்.

நல்லா கேப் விட்டு குடிங்கப்பா

நல்லா கேப் விட்டு குடிங்கப்பா


காரைக்கால் போலீசார் குடிகாரர்களை ஒழுங்குபடுத்தி, சமூக விலகலை கடைபிடிக்குமாறு அவர்களை எச்சரித்து சாராயம் வாங்க அனுமதித்தனர். தமிழகத்தில் அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் வேளையில், இன்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் திறக்கப்பட்ட சாராயக் கடைகளுக்கு சாராயம் வாங்க குடிகாரர்கள் படை எடுத்து வருவதால் அந்த பகுதி முழுவதும் சாராய வாடை அமோகமாக இருந்தது.

நல்லா குடிங்கய்யா.. கொரோனாவுக்கும் கூடவே சியர்ஸ் சொல்லிட்டு ஊத்திக்கங்க!

English summary
Tamil Nadu drunkards are thronging to Karaikal to buy cheap arrack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X