சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதைத்தான் விரும்பினார்கள் மாணவர்கள்.. செம்ம ஹேப்பி.. பூரிக்கும் புன்னகையுடன்! நீங்களே பாருங்க

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பின் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Recommended Video

    10 மாதங்கள் கழித்து.. திறக்கப்பட்ட பள்ளிகள்: பக்கா ஏற்பாடுகளில் பள்ளிக்கல்வித்துறை!

    பள்ளிகளில் அரசு விதிமுறைகளின்படி சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு கிரிமி நாசினி வைத்து கைகள் சுத்தம் செய்யப்பட்டு பள்ளிகளுக்குள் அனுப்பப்பட்டனர்.

    வகுப்பறையில் செய்யக்கூடாதவை என்ன, செய்யக் கூடியவை என்ன என்று பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு வழங்கினர். ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறப்பால் மாணவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பள்ளிகள் திறப்பு

    பள்ளிகள் திறப்பு

    திருச்சியில் பள்ளிகள் திறப்பு: இன்று காலை திருச்சி புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் வரும் மாணவர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமிநாசினி தொளித்தும் பள்ளி வகுப்பறையில் அனுமதித்தனர். மேலும் பள்ளி வகுப்பறையில் 25 பேர் மட்டுமே அமர அறிவுறுத்தப்பட்டனர். மேலும், சமுக இடைவெளியை கருத்தில் கொண்டு ஒரு பெஞ்சில் இரு மாணவர் மட்டுமே அமர வைத்தனர். இதே போல் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்து, கிருமி நாசினி வழங்கிய பின்னர் அனுமதித்தனர்.ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பள்ளி வகுப்பறையில் தெரிவித்தனர்

    சீருடையில் மாணவர்கள்

    சீருடையில் மாணவர்கள்

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவிகள் வழக்கம் போல் பள்ளிக்கு பத்து மாதங்கள் கழித்து வந்தார்கள் அவர்கள் என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கரும்பலகையில் போடப்பட்டிருந்தது. முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தூய்மையான சீருடை அணிந்து வரவேண்டும், தண்ணீர் மற்றும் உணவு கொண்டு வர வேண்டும், இருமல் தும்மல் வரும்பொழுது முக கவசத்தை விலக்கக் கூடாது, சமூக இடைவெளி விட்டு அமரவேண்டும். அவரவர் இருக்கும் இடங்களை விட்டு வேறு இடத்திற்கு செல்ல கூடாது, பள்ளியில் வழங்கப்படும் சத்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிட வேண்டும், உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் . இது போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    முககவசம்

    முககவசம்

    தஞ்சை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் முக கவசம் அணிந்தபடி சமூக இடைவெளி விட்டு வந்தனர் பள்ளி வளாகத்திற்குள் வந்த மாணவ மாணவிகளுக்கு வெப்பநிலைமானி மூலம் சோதனை செய்தும் கைகளில் சானிடைசர்க் கொண்டு தூய்மைப்படுத்திய பின்பு ஆசிரியர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் மேலும் வகுப்பிற்குள் வந்த மாணவர்களை பெஞ்சில் இரண்டு நபர்கள் வீதம் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது இதில் கட்டாயம் முகக் கவசம் அணிந்தபடியே அமர வேண்டும் ஒன்றாக அமர்ந்து பகிர்ந்து உண்ண கூடாது நோய் எதிர்ப்பு சக்திக்காக ஜிங்க் மாத்திரை அனைத்து மாணவர்களுக்கும் தரப்படும் எந்த பயமும் இல்லாமல் அந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுரை கூறினார்கள் மேலும் வீட்டில் இருந்து வரும் போது தண்ணீர் பாட்டில்களை கையில் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தனர். இன்று தற்போது வகுப்புகளில் மாணவ மாணவிகளுக்கான கொரோனா நோய்த் தொற்று பரவுதல் பற்றி விழிப்புணர்வு பற்றி பகுதிகளில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினர்.

    கிருமிநாசினி

    கிருமிநாசினி

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் இன்று முதல் பள்ளி வகுப்பு துவங்கப்பட்டது திரளான மாணவர்கள் ஆர்வத்துடன் வகுப்புகளில் பங்கேற்றனர். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பாக கிருமிநாசினி தெளிப்பது இடைவெளி விட்டு அமரவைத்து முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் நீண்ட மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு மிகுந்த ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

    தேர்வு கால்

    தேர்வு கால்

    சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என 600 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 88,220 பேர் பள்ளிக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் அமருவதுபோல் இடைவெளிவிட்டு அமரவேண்டும்.

    வருகையில்லை

    வருகையில்லை

    தேனி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் முன்னதாக சுத்தம் செய்யப்பட்டு, இன்று காலை பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. விருப்பம் உள்ள மாணவ- மாணவியர்கள் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வருகின்ற மாணவ- மாணவியர்களுக்கு சானிடைசர், முக கவசம், வெப்பநிலை சரிபார்த்து வகுப்பறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அது போல ஒரு பென்ச் க்கு ஒரு மாணவர் என்ற அடிப்படையில் அமரவைக்கப்பட்டனர் அதுபோல ஆசிரிய பெருமக்கள் மாணவ- மாணவியர்களிடம் அடிக்கடி சோப்பு வைத்து கை கழுவ வேண்டும், நண்பர்களுக்குள் உணவு பரிமாற்றம் கூடாது, ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. இன்று பள்ளிகள் திறக்கப்பட்டாலும் 100% மாணவர்கள் வரவில்லை என்பதே உண்மை.

    மாணவர்கள் ஹேப்பி

    மாணவர்கள் ஹேப்பி

    வேலூர் மாவட்டத்தில் 282 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் 20, 561 பேரும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் 15,821 பேரும் பள்ளியில் பயில்கின்றனர். இதில் பெருமளவு மாணவ மாணவிகள் இன்று உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பள்ளிக்கு வந்தனர். பள்ளியின் நுழைவாயிலில் அவர்களை வரிசையாக நிற்க வைத்து கிருமி நாசினி தெளித்து மற்றும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்பு வகுப்புகளில் இடைவெளிவிட்டு அமர வைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மாணவிகள் கூறுகையில் கொரானா சமயத்தில் வீட்டில் இருந்தே படிப்பதற்கு மிகவும் சிரமமாகவும் படிக்கும் எண்ணம் வரவே இல்லை என்றும் மேலும் பள்ளி நண்பர்களை சந்திக்க முடியாது என்று வருத்தமாக இருந்ததாகவும் தற்போது பள்ளி திறக்கப்பட்டது மிக மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தனர். தமிழக அரசு எங்களை பாதுகாப்பாக படிக்க வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சானிடைசர்கள்

    சானிடைசர்கள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனோ தடுப்பு விழிப்புணர்வுடன் 439 பள்ளிகள் திறக்கப்பட்டதில் 52,740 மாணவர்களில் 80 சதவீத அளவுக்கு வருகை தந்துள்ளனர் - மாநில அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குநர் லதா, மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மாணவர்கள் இன்று பள்ளிக்கு வருகை தந்த நிலையில் போதிய சமூக இடைவெளியுடன், உடல் வெப்ப நிலை பரிசோதிக்க பட்டது. பின்னர், சானிடைசர் கொண்டு கைகளை கழுவிய பின்பு ஒரு அறைக்கு 25 மாணவர்கள் வீதம் அனுமதிக்க பட்டனர்.

    English summary
    Schools in Tamil Nadu reopened today after 9 months. Only tenth grade and twelfth grade students were admitted to schools with parental permission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X