அது என்ன திராவிட மாடல்? திராவிட மாதிரினு அழகு தமிழில் சொல்லுங்க! திமுகவுக்கு பாடம் எடுக்கும் தமிழிசை
புதுச்சேரி : திராவிட மாடல் என அரைகுறை தமிழில் இல்லாமல் திராவிட மாதிரி என தாய்மொழியில் முழுமையாக இருக்க வேண்டும் என மறைமுகமாக திமுக அரசுக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார்.
கோவை நீலம்பூர் பகுதியில் தனியார் நிகழ்ச்சியில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஊர் ஓர பண்ணை வீடு! இருட்டறையில் 2 நாளாக 5 பேர்! நம்பிவந்த காதலியை மிருகங்களுக்கு இரையாக்கிய கொடூரன்
தொடர்ந்து மேடையில் பேசிய அவர்," இந்தக் கூட்டத்தில் உள்ளவர்கள் எத்தனை பேருக்கு தமிழ் தெரியும் என கேட்ட அவர் தமிழ் புரிந்து கொள்ள கூடியவர்கள் எத்தனை பேர் என மேடையில் இருந்து கேள்வி எழுப்பினார்.

திராவிட மாடல் ஆட்சி
தொடர்ந்து பேசிய "அவர் தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும். தாய் மொழியை கற்று இன்னொரு மொழியை கற்று கொள்ளுங்கள்,ஆங்கிலம் கலக்காத தமிழைப் பேசி பழகுவது நல்லது. பிறந்த குழந்தை 6மாதத்திற்கு தன்னுடைய அம்மாவின் தாய்ப்பாலை குடிப்பதால் தாயின் சொல்லை கேட்பார்கள், இப்போதெல்லாம் தாய்ப்பாலை குடிப்பதில்லை கன்று குட்டியின் பாலைத்தான் குடிக்கிறார்கள்.

தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
அதனால்தான் இளைஞர்கள் தாயின் சொல்லைக் கேட்காமல் டாஸ்மாக்கில் போய் குடிக்கிறார்கள் எனவும் 10 கோடி பேர் இந்தியாவில் போதைக்கு அடிமையாக உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன்" தாய்மொழியில் முழுமையாக இருக்க வேண்டும்.

திராவிட மாதிரி
திராவிட மாடல்(ஆங்கில சொல்) என்று சொல்வதற்கு திராவிட மாதிரி(தமிழ் சொல்) என சொன்னால் சரியாக இருக்குமோ என்பது ஒரு சின்ன யோசனை, மற்ற மொழியை வேண்டாம் என சொல்வதற்கு நம்ம மொழியை முழுவதுமாக கற்றுக்கொள்வோம் எனவும், புதிய கல்விக் கொள்கையில் அதிக மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து என தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்
கடந்த சில மாதங்களாக சட்டசபை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள் திராவிட மாடல் என்ற சொல்லாடலை பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் மொழியில் மாதிரி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் மாடல் என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்த வேண்டும் என திமுகவை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.