புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.. நாராயணசாமி

Google Oneindia Tamil News

புதுச்சேரி: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்புக்கு நடுவில் நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்வை எழுத 15 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில் இதில 85 சதவீதம் பேர் வரை தேர்வு எழுதியிருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

The NEET exam will be canceled if the Congress comes to power again: Chief Minister V Narayanasamy

முன்னதாக நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள், இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வுக்கு ஆரம்பம் முதலே தமிழகத்தில் கடும் எதிரப்பு இருந்து வரும் நிலையில அடுத்தடுத்த தற்கொலைகள் இன்னும் எதிர்ப்பலையை தீவிரமாக்கி உள்ளது.

நீட் கொடுமை.. நகை அணியத் தடை.. தாலியைக் கழற்றி வைத்து விட்டுப் போன மாணவி.. நெல்லையில் ஷாக்!நீட் கொடுமை.. நகை அணியத் தடை.. தாலியைக் கழற்றி வைத்து விட்டுப் போன மாணவி.. நெல்லையில் ஷாக்!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நீட் தேர்வு குறித்து கூறுகையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார். மூலக்குளம் பகுதியில் நீட் தேர்வு நடைபெற் இடத்தை தனியார் கல்லூரி மையத்தை ஆய்வு செய்த பின்னர் பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்யுமாறு பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

English summary
Puducherry Chief Minister Narayanasamy has said that the NEET exam will be canceled if the Congress comes to power again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X