புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களே வராதீங்க.. கொரோனா தொத்திக்கும்.. கிரண்பேடி வார்னிங்.. எல்லாமே ரத்து!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    Corona Virus Symptoms | Precautions

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    The public has been banned from visiting Puducherry Rajnivas

    இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஈரான், இத்தாலி, உள்பட நான்கு நாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை மத்திய, மாநில பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    The public has been banned from visiting Puducherry Rajnivas

    இதனிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளதாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இதனைதொடர்ந்து புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நாள்தோறும் நடத்தப்பட்டு வரும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்துள்ளதாக ஆளுநர் மாளிகையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகள் அடங்கிய மனுவை ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் உள்ள பெட்டியில் போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The public has been banned from visiting the Puducherry Rajnivas
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X