புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரோடு பூரா ஒரே ஓட்டை.. சாலையில் நடந்த "விண்வெளி வீரர்கள்".. புதுவையில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை சிட்டி எல்லைக்குள் டோல் கேட்.. வாகன ஓட்டிகள் குமுறல்

    புதுச்சேரி: புதுச்சேரியில் பழுதான சாலையை செப்பணிட வலியுறுத்தி விண்வெளி வீரர்கள் போல் வேடமணிந்து, விண்வெளியில் நடக்கும் நூதன போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

    புதுச்சேரியில் பெய்த வடகிழக்கு மழையால் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. நகரப் பகுதி சாலைகள் மட்டுமல்லாது, வில்லியனூர் - மடுகரை, பத்துகண்ணு - திருக்கனூர், மதகடிப்பட்டு - திருக்கனூர் உள்ளிட்ட கிராமப்புற சாலைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

    The youths staged a protest demanding the repair of the road

    மோசமான சாலைகளால் ஏற்படும் புழுதியால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி நகரின் லாஸ்பேட்டை பகுதியில் உள்ள, அசோக் நகரில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக, மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    The youths staged a protest demanding the repair of the road

    பழுதான சாலையை செப்பனிட பல முறை வழியுறுத்தியும், அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, இந்திய மாணவர் சங்கத்தினர் விண்வெளி வீரர்கள் போன்று வேடமணிந்து, சாலையில் நடக்க முடியாமல் விண்வெளியில் பரப்பது போன்று நடத்தி காட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை அப்பகுதியில் நடந்து சென்றவர்கள் சிரித்தவாரே பார்த்து சென்றனர்.

    The youths staged a protest demanding the repair of the road

    பழுதான சாலையை செப்பனிடாவிட்டால் தொடர்ந்து பலகட்ட போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பெங்களூரில் சமீபத்தில் இதுபோன்ற நூதனப் போராட்டங்கள் அதிக அளவில்நடந்துள்ளன. அதே பாணியில் தற்போது புதுச்சேரியிலும் மக்Kள் போராட்டத்தில் குதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    The youths staged a protest demanding the repair of the road
    English summary
    The youths staged a protest demanding the repair of the road
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X