புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு மணி அடித்தால்.. ஒரு திருக்குறள்.. புதுச்சேரியில் அசத்தல் மணிக்கூண்டு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Thirukkural reading with bells in Pondicherry

    புதுச்சேரி: புதுச்சேரியில் பழமை மாறாமல் 50 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரிய மணிகூண்டு 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அலாரம் மற்றும் மணிக்கு ஒருமுறை திருக்குறள் வாசகம் ஒலிக்கும் வகையில் புணரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை காந்தி வீதியில் 50 ஆண்டுகளுக்கு மேலான பழமையான, வரலாற்று சிறப்பு வாய்ந்த மணிக்கூண்டு உள்ளது. பழுதடைந்த நிலையில் இருந்த மணிக்கூண்டை பழமை மாறாமல் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார்.

    Thirukkural reading with bells

    மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் ஒதுக்கி மணிக்கூண்டை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நிதியின் கீழ் மணிக்கூண்டை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், புதிதாக கடிகாரம் பொருத்துதல், கிளமென்சோ பூங்காவை சீரமைத்தல் போன்ற பணிகள் நடத்தப்பட்டது.

    அடங்காமல் எரியும் துக்ளக் தீ.. பாஜக தேவையில்லை.. தனக்குத்தானே காவி சாயம் பூசிக் கொள்கிறாரா ரஜினி!அடங்காமல் எரியும் துக்ளக் தீ.. பாஜக தேவையில்லை.. தனக்குத்தானே காவி சாயம் பூசிக் கொள்கிறாரா ரஜினி!

    இதனடிப்படையில் கிளமன்சோ பூங்கா, மணிக்கூண்டு தற்போது புதுப்பிக்கப்பட்டு கண்ணை கவரும் வகையில் புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது. சீரமைக்கப்பட்ட மணிக்கூண்டு, கிளமன்சோ பூங்காவை சட்டமன்ற உறுப்பினர் வையாபுரிமணிகண்டன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இந்த மணிகூண்டில் கடிகாரம்பொருத்தப்பட்டு, மணிக்கு ஒருமுறை அலாரம் அடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், மணிக்கு ஒருமுறை திருக்குறள் வாசகமும் ஒலிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது அனைவருடைய கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.

    English summary
    Thirukkural reading with bells
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X