புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2% அதிரடி குறைப்பு... லிட்டருக்கு ரூ.1.40 விலை குறையும்!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி விகிதம் 2% குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதுவையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 குறைய வாய்ப்புள்ளது.

VAT on petrol and diesel has been reduced by 2% in puducherry

சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை அந்த எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயித்து வருகின்றன.

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. இது வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்துள்ளது. ஏற்னகனவே சமையல் சிலிண்டர் விலை கடுமையாக அதிகரித்து உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் அதன் மீதான வாட் வரியை பல்வேறு மாநிலங்கள் திரும்ப பெற்று வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்கம், ராஜஸ்தான், அசாம், மேகலாயா ஆகிய மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை நீக்கி விட்டன. இதன் மூலம் அங்கு பெட்ரோல், டீசல் விலை ஒரு சில காசுகள் குறையும்.

கடைசி நேர ட்விஸ்ட்.. பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடும் சட்டப்பேரவை.. ஏதேனும் புதிய அறிவிப்பு வருமா? கடைசி நேர ட்விஸ்ட்.. பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் கூடும் சட்டப்பேரவை.. ஏதேனும் புதிய அறிவிப்பு வருமா?

இந்த நிலையில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி விகிதத்தை 2% உடனடியாக குறைக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார். இதன் மூலம் புதுவையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.40 குறைய வாய்ப்புள்ளது. புதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்த்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
VAT on petrol and diesel has been reduced by 2% in the Union Territory of Pondicherry. As a result, petrol and diesel prices in Puthuvai are likely to fall by Rs 1.40 per liter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X