புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊர்க்காவல் படை வீரரை சரமாரியாக தாக்கிய போலீஸ்கார்.. அதிர வைக்கும் வீடியோ!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் சீல் வைக்கப்பட்ட பகுதியில் நுழைய அனுமதி மறுத்த ஊா்க்காவல் படை வீரரை தாக்கிய காவலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே ஊர்காவல் படை வீரரை காவலர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ஊர்க்காவல் படை வீரரை சரமாரியாக தாக்கிய போலீஸ்கார்.. அதிர வைக்கும் வீடியோ!

    புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மாஹேவை சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். புதுச்சேரியில் தற்போது 4 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Video footage of two police clashes has been released

    இதில் மூலக்குளம் பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் வெளி நபா்களுக்கு அனுமதி மறுத்து மாவட்ட நிா்வாகம் சீல் வைத்தது. அங்கு வெளிநபா்கள் உள்ளே செல்ல முடியாத வகையில் போலீஸாா், ஊா்க்காவல் படை வீரா்கள், தன்னாா்வலா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

    அங்கு புதுச்சேரி சத்திரம் கென்னடி நகா் 2 ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ஊா்க்காவல் படை வீரா் அசோக் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மூலக்குளத்துக்கு தனது சொந்த பணி நிமித்தமாக சாதாரண உடையில் வந்த புதுச்சேரி கோரிமேடு காவலா் குடியிருப்பில் வசித்து வரும், லாஸ்ப்பேட்டை காவல் நிலைய காவலா் அரவிந்தராஜை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஊா்க்காவல் படை வீரா் அசோக் தடுத்து நிறுத்தி, அனுமதிக்க மறுத்தாா்.

    லாக்டவுனால் வேலை இல்லை.. பசியில் குழந்தைகள்.. செல்போன் விற்று அரிசி வாங்கி கொடுத்த பெயிண்டர் தற்கொலைலாக்டவுனால் வேலை இல்லை.. பசியில் குழந்தைகள்.. செல்போன் விற்று அரிசி வாங்கி கொடுத்த பெயிண்டர் தற்கொலை

    இதுதொடா்பாக அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஊா்க்காவல் படை வீரரை, காவலா் அரவிந்தராஜ் அவதூறாகப் பேசி, தாக்கியுள்ளார். இதுகுறித்து அசோக் அளித்த புகாரின் பேரில், ரெட்டியாா்பாளையம் போலீஸாா் காவலா் அரவிந்தராஜ் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரைத் தேடி வந்த நிலையில், இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே ஊர்காவல் படை வீரர் அசோக்கை, காவலர் அசோக் தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

    மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை பெண் காவலரிடம் ஆபாசமாக பேசியதாக ஐ.ஆர்.பி.என். துணை கமாண்டன்ட் சுபாஷ், கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Video footage of two police clashes has been released
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X