புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுவையில் 'கூவிக் கூவி' கொரோனா வேக்சின் போட.. அலையும் சுகாதாரத் துறையினர்.. வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

புதுச்சேரி: ஆந்திர ஏனாம் எல்லை கிராமங்களில் உள்ள மக்கள் தடுப்பூசி போடு கொள்வதை உறுதி செய்யும் வகையில் சுகாதாரப் பணியாளர்கள் வீதி வீதியாகச் சென்று கூவிக் கூவி வேக்சின் போடப் பொதுமக்களை வலியுறுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Recommended Video

    புதுவையில் கூவிக் கூவி கொரோனா வேக்சின் போட.. அலையும் சுகாதாரத் துறையினர்.. வைரலாகும் வீடியோ

    தற்போதைய சூழலில் கொரோனா வைரசுக்கு எதிராக ஒரே பேராயுதமாக தடுப்பூசிகள் மட்டுமே பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளிலும் வேக்சின் பணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் வேக்சின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.

    வேக்சின் மட்டும் போட்டிருந்தால் போதும்.. இனி எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.. அமெரிக்கா அதிரடிவேக்சின் மட்டும் போட்டிருந்தால் போதும்.. இனி எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.. அமெரிக்கா அதிரடி

    வேக்சின் பணிகள்

    வேக்சின் பணிகள்

    முதல் சில மாதங்கள் வேக்சின் குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிகளவில் இருந்தது. இதனால் தடுப்பூசி பணிகள் மந்தமாக நடைபெற்றது. அதேபோல வேக்சின் பற்றாக்குறையும் அதிகளவில் இருந்தது. இதன் காரணமாகவும் தடுப்பூசி பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. இருப்பினும், இந்த சிக்கல்கள் படிப்படியாகக் களையப்பட்டு வேக்சின் பணிகள் மெல்ல வேகமெடுத்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    புதுச்சேரி

    புதுச்சேரி

    விரைவில் அனைத்து மக்களுக்கும் வேக்சின் போட்டு முடிக்க அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாகப் புதுவையில் வேக்சின் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் புதுவையில் தினசரி கொரோனா பாதிப்பு பெரியளவில் குறைந்துள்ளது. புதுவை துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேக்சின் பணிகள் குறித்துத் தொடர்ந்து மேற்பார்வை செய்து வருகிறார்.

    100% தடுப்பூசி இலக்கு

    100% தடுப்பூசி இலக்கு

    அங்கு இதுவரை 6.5 லட்சம் பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 2. 58 லட்சம் பேருக்கு 2 டோஸ் வேக்சின்களும் போடப்பட்டுள்ளது. சிறப்பாக நடைபெறும் வேக்சின் பணிகள் காரணமாக அங்கு வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. இத்துடன் நில்லாமல் விரைவில் 100% தடுப்பூசி என்ற இலக்கை அடையப் புதுச்சேரி நிர்வாகம் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன

    ஏனாம்

    ஏனாம்

    புதுச்சேரி நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்று ஏனாம். ஆந்திராவுக்கு அருகே அமைந்துள்ள இந்த பகுதியில் வைரஸ் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது என்றே சொல்லலாம். கடந்த சில நாட்களாகவே அங்குத் தினசரி வைரஸ் பாதிப்பு ஒற்றை இலக்கிலேயே பதிவாகி வருகிறது. இந்நிலையில், ஏனாம் - ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் பொதுமக்கள் வேக்சின் போட்டுக்கொள்வதை உறுதி செய்ய, வீதி வீதியாகத் தடுப்பூசியுடன் செல்லும் சுகாதார ஊழியர்கள் பொதுமக்களைத் தைரியமாக வேக்சின் போட்டுக்கொள்ளுமாறு கூவிக் கூவி அழைக்கின்றனர்.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    வேக்சின் மட்டுமே கொரோனாவை தடுக்கும் ஒரே பேராயுதம் என்பதால் அனைவரும் விரைவாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதே உள்ளூர் மருத்துவர்கள் தொடங்கி சர்வதேச சுகாதார வல்லுநர்கள் வரை அனைவரது கருத்தாகும். இந்தச் சூழலில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏனாம் - ஆந்திர எல்லை சுகாதார ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பொதுமக்களைக் கூவிக் கூவி அழைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    English summary
    Corona vaccination in Puducherry. Puducherry Health workers viral video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X