புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தாயின் திதிக்கு.. கோழி பிரியாணியும், குவார்ட்டரும் கொடுத்த புண்ணியவான் இவர்தான்!

தாயின் திவசத்துக்கு குவார்ட்டரை மகன் ஏன் வழங்கினார்?

Google Oneindia Tamil News

புதுச்சேரி: தாயின் திவசத்துக்கு கோழி பிரியாணியும், குவார்ட்டரும் தந்தவர் யார் தெரியுமா?

2 தினங்களாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பெற்ற தாயின் நினைவு நாளை மகன் கொண்டாடும் வீடியோதான் அது.

ஒரு டேபிள் மீது கோழி பிரியாணி பொட்டலங்கள் வரிசையாக வைக்க, அதன் அருகே குவார்ட்டர் பாட்டில்கள் குவிக்கப்பட்டுள்ளது.

குழப்ப உணர்வு

குழப்ப உணர்வு

தன் வீட்டுக்கு வந்திருந்த ஆட்களின் பெயர்களை ஒவ்வொருவராக சொல்லி அந்த மகன் அழைக்க, அவர்களும் வந்து கோழி பிரியாணியையும், குவார்ட்டரையும் பெற்றுக் கொண்டு போகிறார்கள். இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு ஒரு புறம் சிரிப்பு, மற்றொரு புறம் கோபம், இன்னொரு புறம் குழப்பம் என எத்தனையோவித உணர்வுகள் வந்து போயின.

குவார்ட்டரா?

குவார்ட்டரா?

முதலில் தாயின் நினைவு நாளை அனுசரிக்காமல், கொண்டாடுவார்களா? என்பதுதான் முதல் சந்தேகம். இரண்டாவது, திவசத்தின்போது அன்னதானம் தராமல், இப்படி யாராவது குவார்ட்டரை தருவார்களா என்பது அடுத்த சந்தேகம். இவர் என்ற யார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை என்றாலும் தற்போது வெளியாகி உள்ளது. இவர் பெயர் அந்தோணி. புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியை சார்ந்தவர்.

புதுச்சேரி

புதுச்சேரி

இவருக்கு அவருடைய அம்மா என்றால் அவ்வளவு இஷ்டமாம். தன்னை ரொம்பவும் கஷ்டப்பட்டு வளர்த்து, ஒரு அரசு வேலையில் சேர்த்து விட்டதே அம்மாதானாம். அந்தோணி இப்போது புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள சுகாதார மைய உதவியாளராக பணி புரிந்து வருகிறாராம். அதனால்தான் அம்மாவின் திவசத்துக்கு அன்னதானம் வழங்க முடிவெடுத்து குவார்ட்டரும் கோழிப் பிரியாணியும் தந்துள்ளார்.

வறுமை கோடு

வறுமை கோடு

கிட்டத்தட்ட 500 பேருக்கு இதனை வினியோகித்துள்ளார். பிரியாணி, குவார்ட்டரை வாங்கி கொண்ட போனவர்கள் எல்லாருமே வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்தானாம். அதனால்தான் அவர்கள் உற்சாகமடைய வேண்டும் என்று குவார்ட்டரும் கோழிப் பிரியாணியும் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

English summary
Why Son sponser Alcohol and Chicken Biriyani to 500 poor people below the powerty line
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X