புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுவையின் எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம்.. நாராயணசாமி உறுதி

புதுவையின் எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம்.. நாராயணசாமி உறுதி

Google Oneindia Tamil News

புதுவை: புதுச்சேரி மாநிலத்தின் எந்தப்பகுயிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அரசு அனுமதி வழங்காது. மக்களுக்கு எதிரான திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மாநில முதல்வர் நாராயணசாமி உறுதிபட கூறியுள்ளார்.

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார். புதுவை மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான கள ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

We are not allowed to take hydrocarbon scheme at any place in Puducherry .. Narayanasamy confirmed

இதுதொடர்பாக தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது எனவும், திட்டத்தை கொண்டு வந்தால் ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் எனவும் கூறி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வருகிறது.

இது குறித்து மத்திய அரசு கடிதம் எதுவும் எங்களுக்கு அனுப்பவில்லை. அப்படி கடிதம் வந்தாலும் அந்த கடிதத்தை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்புவோம். புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தகூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என கூறினார்

We are not allowed to take hydrocarbon scheme at any place in Puducherry .. Narayanasamy confirmed

மேலும் பேசிய நாராயணசாமி கிரண்பேடி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியான தீர்ப்பு என்பதையே உச்சநீதிமன்றத்தின் முடிவு காட்டுவதாக தெரிவித்தார். அரசு நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என கிரண்பேடிக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார்

கூடிய விரைவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கிரண்பேடி சந்திக்க போகிறார் என எச்சரித்தார் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வதில் எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடு இருந்தாலும், ராகுலும், பிரியங்காவும் அவர்களை மன்னித்து விட்டதால், கட்சியின் முடிவிற்கு நான் ஒத்துபோகிறேன் என்றார்.

பாஜகவோடுதான் வாய்க்கா தகராறுன்னு பார்த்தா, காங்கிரசோடும் பஞ்சாயத்து.. டெல்லியில் ஆம் ஆத்மி அதகளம் பாஜகவோடுதான் வாய்க்கா தகராறுன்னு பார்த்தா, காங்கிரசோடும் பஞ்சாயத்து.. டெல்லியில் ஆம் ஆத்மி அதகளம்

தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்ற பிரகாஷ் ஜவ்டேகரின் கருத்துக்கு பதிலளித்த அவர் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்படும் என்றார்.

English summary
puducherry government will not permit the implementation of Hydro carbon project in any of the state of Puducherry. State Chief Minister Narayanasamy has said that we will never allow the program against the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X