புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அது"தான் பிரச்சினையா இருக்காம்.. புதுவையில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியுமா?

Google Oneindia Tamil News

புதுச்சேரி : புதுச்சேரியில் என்ஆர் காங்கிஸ் கூட்டணியில் ஏற்கனவே அதிமுக இருந்து வருகிறது. ஆனால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்னையில் பாஜக., உடனான கூட்டணி உறுதி செய்யப்படாமல் உள்ளது.

Recommended Video

    #Puducherrypolls புதுச்சேரி: ‘மவுனசாமி’யாக இருக்கும் ரங்கசாமி… என்ஆர் காங்-பாஜக தொகுதி பங்கீடு இழுபறி!

    நாட்டில் இதுவரை 18 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ள பாஜக, நடக்க இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலில் புதுச்சேரி மற்றும் மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றவதை முக்கிய இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    புதுச்சேரி முதல்வர் வேட்பாளர் பெரிய மாமனார் ரங்கசாமியா? மருமகன் நமச்சிவாயமா? இடியாப்ப சிக்கலில் பாஜகபுதுச்சேரி முதல்வர் வேட்பாளர் பெரிய மாமனார் ரங்கசாமியா? மருமகன் நமச்சிவாயமா? இடியாப்ப சிக்கலில் பாஜக

     ஒரு எம்எல்ஏ கூட இல்லை

    ஒரு எம்எல்ஏ கூட இல்லை

    தேசிய அளவில் பலமான கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் இருக்கும் பாஜக.,விற்கு புதுச்சேரி சட்டசபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்எல்ஏ., கூட இல்லை. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்எல்ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்ததற்கு, காங்கிரஸ் எம்எல்ஏ.,களை பாஜக விலைக்கு வாங்கியதே காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.

     பாஜக.,வின் திட்டம் என்ன

    பாஜக.,வின் திட்டம் என்ன

    புதுச்சேரியில் தங்கள் கட்சியை சேர்ந்தவரை முதல்வராக்க வேண்டும் என்பதே பாஜக.,வின் திட்டம். இதனால் காங்கிரசில் இருந்து விலகி சமீபத்தில் பாஜக.,வில் இணைந்த நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக நினைத்துள்ளது. இவர் என்ஆர் காங்கிரஸ் ரங்கசாமியின் மருமகன் என்பதால், மக்களிடம் இவருக்கு வரவேற்பு இருக்கும் என பாஜக நினைக்கிறது.

     கராராக இருக்கும் ரங்கசாமி

    கராராக இருக்கும் ரங்கசாமி

    தன்னை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணி என ரங்கசாமி, பாஜக.,விடம் திட்டவட்டமாக கூறி விட்டார். திமுக.,வும் கூட்டணிக்கு முயற்சித்தாலும் அதனை ஏற்க ரங்கசாமி தயாராக இல்லை என என்ஆர் காங்கிரசின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதால் ரங்கசாமி தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

     பாஜக.,வுக்கு வேறு என்ன வழி

    பாஜக.,வுக்கு வேறு என்ன வழி

    புதுச்சேரியில் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளதால், துணைநிலை கவர்னருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, நகராட்சிகள் மூலம் சாலை சீரமைப்பு போன்ற வளர்ச்சி பணிகளை செய்து மக்களை கவரலாம் என பாஜக யோசித்து வருகிறது. இது தேர்தல் விதிமுறைகள் வரம்பிற்குள் வராது என்பதாலும், தமிழிசையை மக்கள் ஏற்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் பாஜக நினைக்கிறது.

     ரங்கசாமியை ஏற்குமா பாஜக

    ரங்கசாமியை ஏற்குமா பாஜக

    தனியாக ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், ஆட்சியிலாவது அங்கம் வகிக்க வேண்டும் என பாஜக நினைப்பதால் ரங்கசாமியின் கோரிக்கையை ஏற்கலாமா னெவும் பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது. ரங்கசாமியின் கோரிக்கையை பாஜக ஏற்கும்பட்சத்தில் அது நமச்சிவாயத்திற்கு பெரும் ஏமாற்றத்தை தரும். முதல்வர் பதவி கொடுப்பதாக நமச்சிவாயத்திற்கு பாஜக வாக்கு கொடுத்துள்ளது. 2016 ம் ஆண்டே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பிருந்தும், கடைசி நிமிடத்தில் காங்கிரஸ் தலைமை நாராயணசாமியை அறிவித்தது.

     காங்கிரசின் நிலை என்ன

    காங்கிரசின் நிலை என்ன

    ஆட்சியை இழந்த காங்கிரஸ், பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் இடையேயான நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறது. இவர்களின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக இடையே என்ன நடக்கிறது என்பதையும் கவனித்து முடிவு செய்ய காத்திருக்கிறது.

    புதிய அரசை முடிவு செய்ய போவது யார்

    30 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டசபையில், காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக ஆகியன தான் முக்கிய கட்சிகளாக உள்ளன. இவைகளில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட எம்எல்ஏ.,க்களை பெறும் கட்சிகள் மட்டுமே புதிய அரசை முடிவு செய்யும் பலம் பெற்றதாக இருக்கும்.

    English summary
    BJP’s plan to have their own government and chief minister in Puducherry
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X