புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உண்மையான பேய் யார் தெரியுமா.. நாராயணசாமிக்கு கிரண் பேடி பொளேர் பதிலடி!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: ஊர் உலகத்தில் என்னென்னவோ சண்டை நடக்குது.. ஆனால் புதுச்சேரியில் மட்டும் வித்தியாசமான சண்டை தொடர்ந்து கொண்டுள்ளது. வேற யாரு.. முதல்வர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையிலான சண்டைதான் அது.

நேற்று நடந்த புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் கலந்து கொண்டு பேசும்போது பொசுக்கென்று கிரண் பேடியை பேய் என்று கூறி விட்டார் நாராயணசாமி. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் ஆரம்பம் முதலே மோதல் போக்கு இருந்து வருவது நாம் அறிந்ததே. இவர்கள் சண்டையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்கியும் சண்டை ஓய்ந்தபாடில்லை.

திருக்குறளை தாய்லாந்து மொழியில் வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடிதிருக்குறளை தாய்லாந்து மொழியில் வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

உச்சமடைகிறது

உச்சமடைகிறது

அண்மைகாலமாக முதலமைச்சர் நாராயணசாமிக்கும் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்குமான சண்டை உச்சத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது பொதுவெளியில் முதலமைச்சர் நாராயணசாமி கிரண்பேடியை பேய் என்று கூறி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிரண் பேடி பேய்

கிரண் பேடி பேய்

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்திராகாந்தி நினைவு நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, எங்கள் அரசு மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இங்கு அரக்க குணம் படைத்த கிரண்பேடியை கவர்னராக மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அவர் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டு தடுத்து வருகிறார். கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் பேய் என குறிப்பிட்டு பேசினார்.

கிரண் பேடி பதிலடி

கிரண் பேடி பதிலடி


இதற்கு பதிலடி தரும் வகையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், புதுச்சேரி மாநிலத்தில் நிதி கட்டுப்பாடுகள் இருந்தாலும் அரசு அதிகாரிகள் மக்களுக்கு அதிகளவு நன்மைகளை செய்ய வேண்டியது அவசியம். மக்கள் நலத்திட்டங்களில் எவ்வித கசிவும் இல்லாமல் அவர்களிடம் கொண்டு செல்லும் பொறுப்புள்ளது. அதை நாம் மக்களிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நம் பணிகள் மூலமாகவே அவர்களுக்கு தெரியவரும்.

நல்லது செய்துள்ளோம்

நல்லது செய்துள்ளோம்

குறிப்பாக நிலத்தடிநீர் மேம்பாடு கூட்டு முயற்சியால் நிகழ்ந்துள்ளது. நகர்புற வாய்க்காலை தூய்மைப்படுத்தியுள்ளோம். இதில் அரசுக்கு செலவில்லை. மழை நேரத்தில் வெள்ளம் வராமலும் தடுக்கப்பட்டது. பல நன்கொடையாளர்களால் இது சாத்தியமானது. ஏழை, எளிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்பட்டது.

யார் பேய்

யார் பேய்

ஆனால் பேய்கள் யாருக்கும் நல்லது செய்ய மாட்டார்கள். அனைத்தும் தனக்கே தேவை என்பதை பேய்களே நினைக்கும். குறிப்பாக மக்களை பேய்கள் பயமுறுத்தும். அரசு அதிகாரிகள் பணியானது மக்களை பாதுகாப்பது தான். பேய் என்ற வார்த்தை வேண்டப்படாத வார்த்தை. நாகரிகமற்றது. அருவருப்பானது. அந்த கருத்தை ஏற்க முடியாது.

 எது உண்மையான பேய்

எது உண்மையான பேய்


உண்மையான பேய் எது தெரியுமா.. அது நிலங்களை ஆக்கிரமிக்கும், அபகரிக்கும். வயதானவர்களிடம் உள்ள நிலங்களை மிரட்டிப் பறிக்கும். இப்போது அந்த மாதிரியான பேய்களுக்கு எதிராக ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு எதிராக பழைய பைல்களை டிஜிபி திறக்க ஆரம்பித்துள்ளார். விரைவில் அந்த பேய்கள் மீது நடவடிக்கை பாயும் என்று அதிரடியாக கூறியுள்ளார் கிரண் பேடி.

இந்த சண்டை எப்பப்பா ஓயும்

English summary
Who and all grabbing the lands from senior citizens illegally are the real demons, blasted Puducherry Lt Governor Kiran Bedi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X