• search
புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"பெட்ரூம்" வரை.. சத்யராஜ் கண்டித்தும்.. கேட்காத தீபா.. திரும்ப திரும்ப.. அதிர வைத்த கொலை!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: பெட்ரூம் வரை கள்ளகாதலனை வரவழைத்துள்ளார் பெண்.. கடைசியில் ஒரு கொலையும் நடந்துள்ளது.. ஆனால் இந்த கொலையில் 2 விஷயங்கள் வெடித்து கிளம்பி உள்ளன.. ஒன்று, அந்த 17 வயது சிறுவன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளான்.. மற்றொன்று, கொலை செய்து புதைக்கப்பட்ட அந்த சடலமே குபீரென மேலெழுந்து மொத்த குற்றவாளிகளையும் காட்டி தந்துவிட்டது.. இந்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் நடந்துள்ளது!

இது ஒரு வழக்கமான கள்ளக்காதல் கொலை என்றாலும், பலவித அதிர்ச்சியை தாங்கி வந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்தவர் சத்யராஜ்... இவர் ஒரு மினி டிரைவர்... கடந்த டிசம்பர் 17-ம் தேதி திடீரென காணாமல் போய்விட்டார்.

இவரது மனைவி தீபா.. கணவனை காணோமே என்று பதறி துடித்து ஒப்பாரி வைக்க துவங்கினார்.. இறுதியில், சேத்தியாத்தோப்பு ஸ்டேஷனில் கணவனை காணவில்லை என்று புகார் தரவும், போலீசாரும் சத்யராஜை தேடி வந்தனர். இந்த சமயத்தில்தான் போலீசாருக்கு ஒரு போன் வந்தது.

 சிதம்பரம்

சிதம்பரம்

அதில், சிதம்பரத்தை அடுத்த புவனகிரி அருகே உள்ள மானாவாரி பகுதியில் ஒரு சடலம் படக்கென மண்ணை பிளந்து வெளியே வந்துவிட்டதாகவும், அந்த சடலத்தின் கை வெளியே நீட்டிக் கொண்டிருப்பதாகவும் தகவல் சொல்லப்பட்டது.. இதையடுத்து போலீசாரும் அந்த சுடுகாட்டுக்கு ஓடினார்கள்.. அதற்குள் தாசில்தார் சுமதிக்கும் தகவல் தெரிவிக்கப்பட, அவரும் அங்கு வந்து சேர்ந்தார்.

திணறல்

திணறல்

சுமதியின் முன்னிலையில்தான் சடலத்தை முழுசுமாக தோண்டி எடுத்தனர்.. போஸ்ட் மார்ட்டமும் உடனே செய்யப்பட்டது.. அப்போதுதான் அது காணாமல் போன சத்யராஜ் என்று தெரிய வந்தது. இப்போது முதல் விசாரணையே தீபாதான்.. கிடுக்கிப்பிடி விசாரணையில் தீபா திணறியே விட்டார்.. மொத்த உண்மையையும் கக்கினார்.. சத்யராஜின் நண்பர் ஐயப்பன்.. அடிக்கடி வீட்டுக்கு வந்து போயுள்ளார்.. அப்படியே தீபாவின் பெட்ரும் வரை வந்துள்ளார்.. நெருக்கம் ஆகி உள்ளனர்.. சத்யராஜ் வீட்டில் இல்லாதபோதெல்லாம் ஐயப்பன் தீபா வீட்டில் ஆஜராகி விடுவார்.

தீபா

தீபா

ஒருநாள் விஷயம் சத்யராஜுக்கு தெரியவந்தது.. தீபாவை கண்டித்தார் கேட்கவில்லை.. ஐயப்பனை கண்டித்தார், அவரும் கேட்கவில்லை.. 2 பேருக்கும் ஓயாமல் அட்வைஸ் செய்து கொண்டே இருந்திருக்கிறார் சத்யராஜ்.. இது தீபாவுக்கு எரிச்சலை தர, கடைசியில் சத்யராஜை கொலை செய்ய முடிவு கட்டி உள்ளார்.. ஒரு கூலிப்படைக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.. சம்பவத்தன்று சத்யராஜுக்கு தீபாதான் மது வாங்கி தந்து, நிறைய குடிக்க வைத்துள்ளார்.. இறுதியில் கூலிப்படையினர் சத்யராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

 மணற்பகுதி

மணற்பகுதி

பிறகு ஒரு காரில் சத்யராஜின் சடலத்தை ஏற்றி கொண்டு, புவனகிரி அருகே உள்ள ஒரு மணற்பரப்பில் குழியை தோண்டி, அங்கே புதைத்துள்ளனர் என்பது தீபாவிடம் விசாரணையில் தெரியவந்தது.. சடலத்தை புதைக்கும்போதே மழை நன்றாக பெய்திருக்கிறது.. புதைத்த பிறகு மழையின் வேகம் அதிகமாகி இருக்கிறது.. அப்போதுதான் புதைக்கப்பட்ட மண் என்பதால், அது சரிந்து விழ தொடங்கி, பிறகு சடலமே வெளியே வரும் நிலைமைக்கு ஆளாகி விட்டது..

சத்யராஜ்

சத்யராஜ்

அதுமட்டுமல்ல, அளவுக்கு அதிகமான மதுவை சத்யராஜுக்கு தந்துவிட்டு, முதலில் வாழை தோப்புக்கு அழைத்து சென்றுள்ளனர்.. சத்யராஜ் தள்ளாடி கொண்டே போனாராம்.. அங்குதான் அரிவாளால் வெட்டி உள்ளனர்.. பிறகு அங்கேயே உடலை புதைக்கவும் குழி வெட்டினர்.. ஆனால், மழை தண்ணீர் அதிகமாக தேங்கியிருக்கவும்தான், காரை கொண்டு வந்து வேலங்கிராயப்பேட்டை கடற்கரை பகுதிக்கு எடுத்து வந்து புதைத்துள்ளனர்.

மணற்பகுதி

மணற்பகுதி

அதன்பிறகு ஓரிருநாள் கழித்து புதைத்த இடத்தை இவர்கள் அனைவரும் சென்று பார்த்தார்களாம்.. அது மணற்பகுதி என்பதால் சடலம் மேலே வருவது போல் இருந்திருக்கிறது.. அதனால், நர்சரி கார்டன் சென்று புல் கட்டை வாங்கி வந்து அந்த சடலத்தின் மீது பரப்பி வைத்துள்ளனர்.. ஆனால், அந்த புல்லையும் தாண்டிதான் சடலம் மேலே எழும்பி கொண்டு வந்துள்ளது. இப்போதைக்கு ஐயப்பனுடன் வினோத், அருண், கார்த்தி, போன்றோர் கைதாகி உள்ளனர்..

சிறுவன்

சிறுவன்

இதில் மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் கூலிப்படையில் 17 வயது சிறுவன் அடக்கம்.. இவன் விருத்தாச்சலம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவனாம்.. சிறையிலும் அடைக்க முடியாது என்பதால், சிறுவர் சீர்திருத்தபள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.. ஆனால், 17 வயதிலேயே கூலிப்படையினருடன் சிறுவன் எப்படி சேர்ந்திருக்க முடியும்? பின்னணயில் யாரேனும் உள்ளார்களா? இதுவரை வேறு ஏதேனும் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளானா என்பது போன்ற விசாரணை நடந்து வருகிறது!

English summary
Wife killed husband near puducherry and 5 arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X