புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அபிநந்தனுக்காக இலவச ஜெராக்ஸ்.. அசத்திய புதுச்சேரிக் கடைக்காரர்!

Google Oneindia Tamil News

சென்னை: அபிநந்தன் பத்திரமாக தாயம் திரும்பியதை புதுச்சேரியைச் சேர்ந்த ஜெராக்ஸ் கடைக்காரர் ஒருவர் வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.

கடந்த 27 ஆம் தேதி பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தபோது, பாகிஸ்தான் விமானத்தை விரட்டி சென்ற இந்திய விமானப்படையின் மிக் - 21 ரக விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. அந்த விமானத்தை ஓட்டி சென்ற தமிழகத்தை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

xerox free for abinandhan

இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறை பிடிக்கப்பட்ட அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பாகிஸ்தானை வலியுறுத்தின. இதனால் வேறு வழியின்றி நேற்று வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அபிநந்தனை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.

அப்போது வாகா எல்லையில் கூடியிருந்த இந்திய மக்கள் அவரை நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தற்போது அபிநந்தனுக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரிடம் ராணுவ உயரதிகாரிகள் விசாரணையும் நடத்த உள்ளனர்.

xerox free for abinandhan

இதனிடையே அபிநந்தன் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளதை நாட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் இந்த வேலையில், அபிநந்தனின் வருகையை ஆதரித்து புதுச்சேரியில் ஒரு கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஜெராக்ஸ் இலவசமாக எடுத்துகொடுக்கப்பட்டது. ஆம் புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் அதன் உரிமையாளர் அபிநந்தன் வருகையை ஆதரித்து ஒருநாள் முழுவதும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி ஜெராக்ஸ் இலவசம் என்று அறிவிப்பு பலகையை வைத்து ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தார்.

அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவ பரிசோதனை.. அப்புறம் உளவுத்துறை விசாரணை அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவ பரிசோதனை.. அப்புறம் உளவுத்துறை விசாரணை

கடை உரிமையாளரின் இந்த நாட்டுப்பற்றை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

English summary
Puducherry Zerox shop owner has celebrated Abhinandan's return to India with free zerox to customers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X