புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கஜா நிவாரண பால் பவுடர் சாப்பிட்ட 7 பேருக்கு வாந்தி மயக்கம்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி

புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு புயல் நிவாரணமாக வழங்கிய பால் பவுடரை வாங்கி சாப்பிட்ட 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு புயல் நிவாரணமாக வழங்கிய பால் பவுடரை வாங்கி சாப்பிட்ட 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மஞ்சு விடுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கிய நிவாரண பொருட்களில் உள்ள பால் பவுடர் வாங்கி சாப்பிட்ட ஏழு பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களை கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

7 people admitted in hospital after ate Gaja strom relief milk powder

ஆனால் பரமக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட உறவினர்கள் கரம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கரம்பக்குடி வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

English summary
7 people admitted in hospital after ate Gaja storm relief milk powder in Pudukottai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X