• search
புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. இமைக்கும் நேரத்தில் நடந்த கோர மோதல்.. 7 கார்கள்.. பறிபோன 6 உயிர்கள்

|
  புதுக்கோட்டை.. 7 கார்கள் அடுத்தடுத்து மோதல்.. 6 பேர் பலி-வீடியோ

  புதுக்கோட்டை: தமிழகம் இதற்கு முன்பு இப்படி ஒரு கார் விபத்தை சந்தித்திருக்குமா தெரியாது.. மொத்தம் 7 கார்கள்.. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதி கொண்டதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, 12 பேர் உயிர் ஊசலாடியது.. இதில் மேலும் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தான் இந்த விபத்து நடந்துள்ளது.

  நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் சாலையில் புதுக்கோட்டையில் இருந்து திருச்சியை நோக்கி நேத்து சாயங்காலம் நாலரை மணி அளவில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது.

  அந்த காரை சிதம்பரம் என்ற 40 வயது டிரைவர் ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன்பக்கத்தின் வலது பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக நடுரோட்டில் ஓடியது.

  ஆபாச படங்களை வெளியிடுவேன்.. மிரட்டிய காதலன்.. உயிரை மாய்த்து கொண்ட ஆசிரியை!

  காப்பாத்துங்க

  காப்பாத்துங்க

  அந்த நேரம் பார்த்து, திருச்சி மற்றும் புதுக்கோட்டையை நோக்கி 2 பக்கமும் வந்த 6 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக பலத்த சத்தத்துடன் மோதி கொண்டன. இதனால் சில கார்கள் ரோட்டோரம் குப்புற கவிழ்ந்துவிட்டது. இதனால் காருக்குள்ளிருந்து "காப்பாத்துங்க.. காப்பாத்துங்க" என்ற மரண ஓலம் அந்த பகுதியையே உலுக்கி போட்டது.

  திணறினார்கள்

  திணறினார்கள்

  எந்த காரில் இருந்து சத்தம் கேட்கிறது என்றுகூட தெரியாமல், அங்கிருந்த பொதுமக்கள் விழுந்து கிடந்த எல்லா கார்களிடமும் தலைதெறிக்க ஓடினார்கள். சத்தத்தை கேட்டு திணறினார்களே தவிர, எந்த காரில் அபாயம் என்று உடனடியாக தெரியவில்லை.

  போராட்டம்

  போராட்டம்

  ஆனால், இந்த கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் ரெங்கராஜ் 32, நாகரத்தினம் 78, செல்வம், டிரைவர் சிதம்பரம் என 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 குழந்தைகள் உட்பட 18-க்கும் மேற்பட்டவர்கள் ரத்தகாயங்களுடன் விழுந்து உயிருக்கு போராடினர்.

  தீவிர சிகிச்சை

  தீவிர சிகிச்சை

  உடனடியாக சுற்றுவட்டாரங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து, மீட்பு வேலையில் இறங்கின. புதுக்கோட்டை போலீஸ் எஸ்பி சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்துவிட்டார். படுகாயமடைந்தவர்கள் அனைவருமே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர். இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நாகலட்சுமி என்ற 57 வயது பெண் இறந்துவிட்டார்.

  7 கார்கள்

  7 கார்கள்

  இந்நிலையில் இன்று காலை மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்படி ஒரு விபத்து இதற்கு முன்பு நடந்ததே கிடையாது. ஏனென்றால் விபத்து நடந்த சாலை நேரான சாலைதான். அப்படியிருந்தும் எப்படி 7 கார்கள் மோதிக் கொண்டு விபத்து நடந்துள்ளதால், விசாரணை தீவிரமடைந்து வருகிறது.

   
   
   
  English summary
  6 killed 7 cars crash accident in Pudukottai Trichy highway and 12 injured severely
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X