புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி, கமல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என காங். பகிரங்கமாக அறிவிக்குமா? புதிர் போடும் அர்ஜூன் சம்பத்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது கட்சிகள் நோட்டாவுக்கு கீழேதான் ஓட்டுகள் வாங்கும் என விமர்சிக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி, இந்த இருவரது கட்சிகளுடன் கூட்டணி இல்லை என பகிரங்கமாக அறிவிக்குமா? என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட கீழ 7-ம் வீதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளரிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் வெற்றி பெறும். ரஜினிகாந்த் யாருடைய முக முடியுடனும் இல்லை. அவர் தனியாக தனி வழியில் இருக்கிறார்.

நல்லதை நினைக்கும் அனைவருமே எம்ஜிஆரின் நீட்சிதான்.. நாங்கள் அவர் வாரிசுதான்.. கமல்ஹாசன்நல்லதை நினைக்கும் அனைவருமே எம்ஜிஆரின் நீட்சிதான்.. நாங்கள் அவர் வாரிசுதான்.. கமல்ஹாசன்

ரஜினி ஏ டீம்

ரஜினி ஏ டீம்

தமிழகத்தில் ரஜினிகாந்த் ஏ டீம். தமிழக முதலமைச்சர் 2500 ரூபாய் பொங்கல் தொகையாக அறிவித்திருப்பதை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாமல் தற்போதைய காலகட்டத்தில் மக்களுக்கான மறுவாழ்வு பேருதவியாக பார்க்க வேண்டும்.

சாதிவாரியாக கணக்கெடுப்பு

சாதிவாரியாக கணக்கெடுப்பு

பொதுவான கண்ணோட்டத்தில் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இந்த பொங்கல் பரிசு பொங்கல் கொண்டாடுபவர்களுக்கே மட்டுமே வழங்க வேண்டும் என்பதே எனது கருத்து. ஜாதிவாரியான கணக்கெடுப்பு மனுவில் நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது. சாதிவாரியாக சாதிகளை பிரித்து சலுகைகள் கொடுப்பது சாதிகளாக பிரிக்குமே தவிர சமூக நலத்திற்காக இருக்காது.

எம்ஜிஆரும் பாஜகவும்

எம்ஜிஆரும் பாஜகவும்

எம்ஜிஆரை பயன்படுத்துவது ஓட்டு அரசியலுக்காக தான். எம்ஜிஆரை முன்னிறுத்த வேண்டிய அவசியம் பாஜக போன்ற கட்சிகளுக்கு இல்லை. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கான ஓட்டுவங்கி அழிந்து வருகிறது.

காங்கிரசால் அறிவிக்க முடியுமா?

காங்கிரசால் அறிவிக்க முடியுமா?

தமிழகத்தில் திமுகவின் தயவால் காங்கிரஸ் கட்சி உள்ளது. நோட்டாவிற்கு கீழ்தான் ரஜினி, கமல் கட்சிகள் ஓட்டு வாங்கும் எனக் கூறும் காங்கிரஸ் இருவருடனும் கூட்டணி கிடையாது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அர்ஜூன் சம்பத் கூறினார்.

English summary
Hindu Makkal Katchi President Arjun Sampath has raised questions to TNCC on Alliance with Rajini and Kamal Haasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X