ஆசிரியர்களே டிவிதான் பாக்குறாங்க! மாணவர்கள் குறும்பு செய்யனும் -பள்ளியில் கார்த்தி சிதம்பரம் அட்வைஸ்
புதுக்கோட்டை: ஆசிரியர்களே வீட்டுக்கு சென்றால் டிவிதான் பார்க்கிறார்கள் என்றும், மாணவர்கள் இந்த வயதில் நிறைய குறும்பு செய்து ஓடி விளையாட வேண்டும் எனவும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.
அரிமளம் ஒன்றியம், ஆயிங்குடி கிராமம் சென்ற சிவகங்கை மக்களவைத் தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அதன் பின்னர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு சென்ற கார்த்தி சிதம்பரம் மாணவர்களோடு கலந்துரையாடினார்.
நீட் பிஜி தேர்வை ஒத்திவைங்க! மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
|
மாணவர்களிடம் கலந்துரையாடல்
அப்போது மாணவ மாணவிகளிடம், ஸ்கூலுக்கு வருவது ஜாலிய இருக்கா? கஷ்டமா இருக்கா? என்று கேட்டார். அதற்கு மாணவர்கள் ஜாலியா இருக்கு' என்று பதிலளித்தனர். பின்னர் அங்கிருந்த ஆசிரியர்களிடம் கழிவறைகள் குறித்து கெட்ட அவர், மாணவர்களிடம் டாய்லெட் எல்லாம் சுத்தமாக இருக்கிறதா? என்று வினவினார். அனைவரும் ஆமாம் என்று சொல்ல, அப்படி சொல்ல சொன்னார்களா? என்று கார்த்தி சிதம்பரம் பதில் கேள்வி எழுப்பினார்.

தனியார் பள்ளியில் மதிய உணவு குறித்து கேள்வி
அதன் பின்னர் மதிய உணவு எல்லாம் நன்றாக இருக்கிறதா என கார்த்தி சிதம்பரம் எழுப்பிய கேள்விக்கு மாணவர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தனர். உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் இது தனியார் பள்ளி என்று கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கினர். உடனே மாணவர்களிடம் "நீங்களே மதிய உணவு எல்லாம் எடுத்து வந்துவிடுவீர்களா? நன்றாக சாப்பிடுகிறீர்களா? சாப்பிட்டு நன்றாக கை கழுவுகிறீர்களா? பாத்திரம் எல்லாம் கழுவுகிறீர்களா?" என்று கேட்டார்.

நிறைய விளையாடனும், புத்தகம் படிக்கனும்
அனைத்துக்கும் மாணவர்கள் ஒன்றாக உம்' போட்டனர். அதன் பின்னர் பேசிய அவர், "நிறைய விளையாடனும், நிறைய குறும்பு செய்யனும், கலகலவென சிரிக்கனும். அதான் முக்கியம். சரியா?" என்று ஆலோசனை வழங்கினார். பின்னர் "பள்ளி புத்தகம் மட்டும் படிப்பது போதாது. சந்தோசமாக இருக்கும் வகையிலும், சிரிக்கும் வகையும் புத்தகங்களை படிக்கனும். நூலகம் செல்ல வேண்டும்." என்று அறிவுரை வழங்கினார்.

ஆசிரியர்களே டிவிதான் பாக்குறாங்க!
பள்ளி புத்தகம் அல்லாமல் வேறு புத்தகம் யார் வாசித்தது என்று அவர் கேட்க ஒரு மாணவர் கையை உயர்த்தி பஞ்சத்தந்திரம் என்றார். "வெரி குட், பஞ்ச தந்திரத்தில் என்ன கதை படிச்சீங்க.." என்று கார்த்தி சிதம்பரம் கேட்டார். அப்போது அங்கு நின்ற ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு நேரம் இல்ல. ஒரே ஹோம் ஒர்க். நீங்களே வீட்டுக்கு போனால் டிவிதான் பார்க்கிறீர்கள்.

குறும்பு செய்யுங்க!
இந்த வயசுல ரொம்ப முக்கியம் குறும்பு செய்வதுதான். யார் இங்க குறும்பே செய்றதில்ல.." என்று கேட்டபோது மாணவர்கள் யாரும் கை உயர்த்தவில்லை. யார் இங்க நிறைய குறும்பு செய்கிறார்கள் என்று கேட்டவுடன் அனைவரும் கை தூக்கினார்கள். "நிறைய குறும்பு செய்யனும். நிறைய சிரிக்கனும். ஓடி விளையாடனும். ஹேப்பியா இருக்கனும். ரிலாக்சா இருக்கனும். ஆல் தி பெஸ்ட்." என்று சொல்லி அங்கிருந்து விடைபெற்றார்.