புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாய லோன் ரத்து.. கார்த்தி சிதம்பரம் எழுப்பிய பகீர் கேள்வி.. பதில் அளிக்குமா தமிழக அரசு!

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: கூட்டுறவு வங்கிகள் தற்போது ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ளதால் தமிழக அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியுமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு விவசாய கடனை அடைக்க வழிவகை உள்ளது. ஆனால் தள்ளுபடி செய்ய தமிழக அரசிற்கு அதிகாரம் உள்ளதா என்பது தெரியவில்லை என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    விவசாய லோன் ரத்து.. கார்த்தி சிதம்பரம் எழுப்பிய பகீர் கேள்வி - வீடியோ

    புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். மேலும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராம சுப்புராம் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அவரை வாழ்த்தினார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். மத்திய அரசு புதிதாக செஸ் வரியை அனைத்து பொருட்களுக்கும் விதித்துள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. இந்த வரியால் எந்த மாநிலத்திற்கும் வருமானம் வராது முழுக்க முழுக்க மத்திய அரசிற்கு தான் இந்த வரி போய்ச் சேரும்.

    மாற்றம் இருக்காது

    மாற்றம் இருக்காது

    ஒட்டுமொத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சசிகலா பின்னால் செல்லும். அது தேர்தலுக்கு முன்னால் அல்லது தேர்தல் தோல்விக்குப் பிறகா என்பதுதான் கேள்விக்குறி. சசிகலா வருகையால் தேர்தல் முடிவில் எந்த மாற்றமும் இருக்காது. திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    கடனை அடைக்க முடியும்

    கடனை அடைக்க முடியும்

    கூட்டுறவு வங்கிகள் தற்போது ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ளதால் தமிழக அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியுமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு விவசாய கடனை அடைக்க வழிவகை உள்ளது.. ஆனால் தள்ளுபடி செய்ய தமிழக அரசிற்கு அதிகாரம் உள்ளதா என்பது தெரியவில்லை. விவசாய கடன் தள்ளுபடி பெற்றவர்கள் இனி எந்த வங்கியிலும் கடன் பெறாதவாறு விவரங்களை வாங்கி வைத்துக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விமர்சனங்கள்

    விமர்சனங்கள்

    ஜாதி என்பது இந்தியாவின் சாபக்கேடு. அமைச்சர் சிவி சண்முகம் என்ன பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை அவர் அவ்வாறு பேசியிருந்தால் தவறு என்றார். சமீப காலமாக அரசியல் தலைவர்கள்தரம் தாழ்ந்த விமர்சனங்களை சமீபகாலமாக வைத்து வருகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியில் அதுபோன்று விமர்சனங்கள் செய்வது கிடையாது.

    தொகுதி பங்கீடு

    தொகுதி பங்கீடு

    கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வந்துதான் ஆக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வந்தால் அவருக்கு நல்லது என்றுதான் நான் கூறினேன். எங்கள் கூட்டணி வலுவாக தான் உள்ளது. தொகுதிப் பங்கீட்டில் திமுக கூட்டணிக்கு எந்தவிதமான சிக்கலும் ஏற்படாது" இவ்வாறு கூறினார்.

    English summary
    Co-operative banks under the control of the Reserve Bank .. Does the Government of Tamil Nadu have the power to loans waiver .. Karthi Chidambaram doubt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X