புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடுமை.. சுரங்க நீரில் மூழ்கி பெண் டாக்டர் பலி.. நீச்சலடித்து தப்பிய மாமியார்.. கொதித்தெழுந்த மக்கள்

சுரங்கப்பாதை நீரில் மூழ்கி பெண் மருத்துவர் உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை நீரில், காரில் கடந்து செல்ல முயன்ற அரசு மருத்துவர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அவரது மாமியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

    சுரங்க பாதையில் காரில் சென்ற போது விபரீதம்… காரில் சிக்கி பெண் மருத்துவர் பரிதாப பலி!

    புதுக்கோட்டை மாவட்டம் தொடையூர், பொம்மாடிமலை, வெள்ளலூர், நார்த்தாமலை கீரனூர், அன்னவாசல் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது...

    இதன்காரணமாக பிரதான சாலைகளிலும் ரயில்வே சுரங்கங்களிலும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த வகையில் தொடையூர் அருகே உள்ள ரயில்வே சுரங்கத்திலும் ஏராளமான தண்ணீர் தேங்கி கிடந்தது..

    வேலையை ஆரம்பிச்சாச்சு.. 4 வழித்தடங்கள்.. சூப்பர் முடிவெடுத்த தெற்கு ரயில்வே! வேலையை ஆரம்பிச்சாச்சு.. 4 வழித்தடங்கள்.. சூப்பர் முடிவெடுத்த தெற்கு ரயில்வே!

     டாக்டர் சத்யா

    டாக்டர் சத்யா

    அப்போது அந்த சுரங்கத்தை கடக்க சத்யா என்ற பெண் மருத்துவர் காரில் வந்துள்ளார்.. அந்த காரில் தன்னுடைய மாமியாரையும் உடன் அழைத்து வந்திருந்தார்.. டாக்டர் சத்யா ஒசூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றுபவர்.. கணவர் பெயர் சிவக்குமார்.. தொடையூர் என்ற பகுதியை சேர்ந்தவர்.. காரில் இவர்கள் வரும்போது, சுரங்கம் முழுக்க சுமார் 20 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி கிடந்ததால், சத்யா வந்த கார் அதில் மெல்ல மூழ்க ஆரம்பித்தது..

    சுரங்கபாதை

    சுரங்கபாதை


    ரயில்வே பாலத்தில் தண்ணீர் அந்த அளவுக்கு தேங்கியிருக்காது என்று நினைத்துதான் தொடர்ந்து காரில் சென்றுள்ளார் சத்யா.. சுரங்கத்தினுள் செல்ல செல்ல, சாலையில் இருந்த தண்ணீர், அந்த காரின் சைலன்சரில் புகுந்து நீருக்குள் மூழ்க ஆரம்பித்துவிட்டது.. இதனால் இருவரும் காருக்குள்ளிருந்தே அலறி துடித்தனர்.. அவர்களால் உடனடியாக நீரில் இருந்து வெளியே வர முடியவில்லை..

     சீட் பெல்ட்

    சீட் பெல்ட்

    ஒருகட்டத்தில் மாமியார் மட்டும் காரின் கதவை திறந்து கொண்டு, நீச்சல் அடித்து வெளியேறிவர முயன்றார்.. ஆனால், வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த சத்யா, சீட் பெல்ட் அணிந்திருந்ததால், உடனடியாக அவரால் வெளியேற முடியாமல் தண்ணீருக்குள்ளேயே மூச்சுத்திணறி மூழ்கிவிட்டார்.. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரில் குதித்து, காரையும் உடைத்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்..

    மாமியார்

    மாமியார்

    ஆனால், டாக்டர் சத்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.. மாமியாருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.. சத்யாவின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் அந்த பகுதி மக்கள் கொந்தளித்து விட்டனர்.. மழைக்காலங்களில் இதுபோல் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி விடுவதால் பெரும் அசம்பாவிதம் நடந்துவிடும் என்பதற்காகத்தான் தங்கள் கிராம மக்கள் போராடி வந்தோம். இனியாவது அந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி துடையூர், வெள்ளனூர், பொம்மாடிமலை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் புதுக்கோட்டை - திருச்சி சாலையில் பொம்மாடிமலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிர்வாகம்

    நிர்வாகம்

    போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை நடத்தினர்.. ஆனாலும் பொதுமக்கள், ரயில்வே பாலத்திற்கு பதிலாக மேம்பாலம் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தால்தான் போராட்டத்தை தொடருவோம் என்றும், இந்த சுரங்கப் பாதை மழைநீர் தேங்கியுள்ளதால், 30 கிமீ சுற்றிச் செல்வதாகவும் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.. மூச்சுதிணறியே நீரில் மூழ்கி உயிரிழந்த டாக்டரின் மரணம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

    English summary
    Female Doctor drowns in stagnant water and mother in law survives by swimming near Pudukottai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X