புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"உன் மனைவியை கொலை செய்து புதைத்துவிட்டேன்.. மன்னித்துவிடு.." வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பிய நபர்!

பெண்ணை கொன்று புதைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    புதுக்கோட்டை.. பெண்ணை கொன்று புதைத்த இளைஞர் கைது-வீடியோ

    புதுக்கோட்டை: "உனது மனைவியை கொலை செய்து, புதைத்து விட்டேன்" என்று பெண்ணை கொலையும் செய்து, கணவனுக்கு வாட்ஸ்-அப்பிலும் அனுப்பி உள்ளார் ஒருவர்! அரசு ஊழியரான இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்!

    புதுக்கோட்டை பொன்னைப்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி பெருமாள் - பாண்டிச்செல்வி. பெருமாள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். பாண்டிச்செல்வி, மகன், மகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். பாண்டிச்செல்விக்கு வயசு 34 ஆகிறது.

    அப்போது, ரெங்கையா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். ரெங்கையா ஒரு மாற்றுதிறனாளி என்றும் சொல்லப்படுகிறது. அடிக்கடி பாண்டிச்செல்வி வீட்டுக்கு வந்து போவதுடன், இருவரும் பலமுறை ஜாலியாகவும் இருந்துள்ளனர்.

    நடுங்கிய பல்லாவரம்.. நள்ளிரவில் துப்பாக்கி சத்தம்.. ராணுவ அதிகாரியை கொன்று.. வீரர் தற்கொலை!நடுங்கிய பல்லாவரம்.. நள்ளிரவில் துப்பாக்கி சத்தம்.. ராணுவ அதிகாரியை கொன்று.. வீரர் தற்கொலை!

    புகார்

    புகார்

    இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதியன்று அந்த பகுதியில் நடைபெற்று வந்த 100 நாள் வேலைக்கு செல்வதாக பாண்டிச்செல்வி வீட்டில் சொல்லிவிட்டு, நேராக ரெங்கையாவை பார்க்க போனார். ஆனால் அன்று முழுவதும் அவர் வீட்டிற்கு திரும்பவே இல்லை. அதனால் வீட்டில் உள்ளவர்கள் போலீசில் புகார் அளிக்கவும், அதன்பேரில் விசாரணை நடந்து வந்தது.

    மெசேஜ்

    மெசேஜ்

    இந்த சமயத்தில், சிங்கப்பூரில் பணியாற்றி வந்த பெருமாளின் வாட்ஸ்அப் நம்பருக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், "உன் மனைவியை கொலை செய்து புதைத்துவிட்டேன்.. என்னை மன்னித்து விடு" என்றிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் உடனடியாக மாமனாருக்கு தகவல் சொல்லவும், போலீசார் விரைந்து சென்று ரெங்கையாவை கைது செய்து விசாரித்தனர்.

    கழுத்தை அறுத்தேன்

    கழுத்தை அறுத்தேன்

    அப்போது போலீசாரிடம் ரெங்கையா சொன்னதாவது: "எனக்கும் பாண்டிச்செல்விக்கும் கள்ள உறவு இருந்தது. ஆனால் நாள் ஆக ஆக என்னிடம் அடிக்கடி நகை, பணம் கேட்டு நச்சரித்து வந்தார். நான் அதை மறுத்து வந்தேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறும் வந்து கொண்டே இருந்தது.

     வாக்குமூலம்

    வாக்குமூலம்

    அதனால் சம்பவத்தன்றும் இதே போல பணம் வேண்டும் என்று பாண்டிச்செல்வி என்னை நச்சரித்தார். அதனால் கண்மாய் பகுதிக்கு பாண்டிசெல்வியை அழைத்து சென்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தேன். பிறகு அங்குள்ள ஒரு கண்மாயில் குழி தோண்டி புதைத்துவிட்டேன்" என்று வாக்குமூலம் தந்தார் ரெங்கையா.

    கைது

    கைது

    பின்னர், ரெங்கையா சொன்ன இடத்தில், பாண்டிச்செல்வியின் உடலை கைப்பற்றி தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமில்லை.. பாண்டிச்செல்வி உடலை புதைப்பதற்கு பள்ளம் தோண்டி கொடுத்த வாழைக்குறிச்சியை சேர்ந்த தங்கராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    English summary
    Government staff murdered women due to illegal relationship near Pudukottai and arrested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X