புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கைது செய்யாதீங்கனு ஜாமீன் கேட்டு அலைகிறார் "கா.சி".. இவர் எங்க ஜெயிக்க போறாரு?.. எச் ராஜா

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: ஜாமீன் கேட்டு நீதிமன்றம் நீதிமன்றமாக அலைந்து வரும் கார்த்தி சிதம்பரம் எப்படி மக்கள் பணியாற்ற முடியும் என்றும் எனது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும் சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச் ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சிவகங்கை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளராக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்குகளை சேகரித்தார்.

பின்னர் டீக்கடை ஒன்றில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எச் ராஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எச் ராஜா கடந்த தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரசாரம் செய்கையில் மோடி ஆட்சிக்கு வந்தால் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டம் நிறுத்தப்படும் என்று பொய்ப் பிரச்சாரத்தை பரப்பினார்.

ஈரோடு வாக்காளர்களை ஈர்க்கப்போவது இவர்களில் யார்?

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

ஆனால் இன்றுவரை இந்த திட்டம் தொடர்ந்து வருகிறது. 200 நாட்களாக தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எப்படி வெல்ல முடியும்

எப்படி வெல்ல முடியும்

அவரால் வெற்றி பெற முடியாது. மக்கள் அவரை ஆதரிக்க மாட்டார்கள். நீதிமன்றம் நீதிமன்றமாக கைது செய்யாதீர்கள் கைது செய்யாதீர்கள் என்று ஜாமீன் கேட்டு படியேறி வரும் இவர்கள் எப்படி வெல்ல முடியும். மக்கள் பணியாற்ற முடியும்.

நாம் எதுவும் செய்யவேண்டாம்.. அதிமுகவை அமமுகவே காலி செய்துவிடும்.. கூலாக பிளான் போடும் ஸ்டாலின்! நாம் எதுவும் செய்யவேண்டாம்.. அதிமுகவை அமமுகவே காலி செய்துவிடும்.. கூலாக பிளான் போடும் ஸ்டாலின்!

நிறைவேற்றம்

நிறைவேற்றம்

கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளதால் அவர்களது பணபலம் எனக்கு பெரும் சவாலாக இருக்கும், ஆனால் மக்கள் பலம் எனக்கு இருப்பதால் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. புதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படாது.

சிறப்பு அம்சங்கள்

சிறப்பு அம்சங்கள்

தொகுதிக்கான தேர்தல் அறிக்கையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படாது. காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் என்றார் எச் ராஜா.

English summary
BJP National Secretrary and Sivagangai BJP candidate H.Raja criticises Karti Chidambaram that he is entering all courts to get ban from arrest. How could he do good for people?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X