புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் : தேவகோட்டை பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே கொண்டாட்டம்

கொரோனா லாக்டவுனை முன்னிட்டு காமராஜர் கல்வி வளர்ச்சி நாளை வீட்டிலேயே பள்ளி மாணவர்கள் கொண்டாடியதோடு காமராஜரின் பெருமைகளை சிறப்பாக எடுத்துரைத்தனர்.

Google Oneindia Tamil News

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே காமராஜர் கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடினார்கள். பேச்சுப்போட்டி,கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி என பலவகையான போட்டிகளும் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்த உடன் பரிசளிக்கப்படும் என தலைமை ஆசிரியர் அறிவித்துள்ளார்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வீட்டிலேயே மாணவர்கள் கல்வி வளர்ச்சி தினத்தை கொண்டாடினர்.

கொரோனாவால் பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு மாணவர்கள் வீட்டிலேயே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா,முத்துமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர்.

மாணவர்களுக்கு பரிசு

மாணவர்களுக்கு பரிசு

ஓவியம்,கவிதை,பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் ராகேஷ்,ராஜேஸ்வரி,ஜோயல்,சண்முகம்,புகழேந்தி,யோகேஸ்வரன்,
கீர்த்தியா,முகேஷ் அம்பானி,ஈஸ்வரன்,யோகேஸ்வரன்,திவ்யஸ்ரீ,பிரதிஷா ,முத்தய்யன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி திறந்த பிறகு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

ஆன்லைன் போட்டிகளில் பங்கேற்பு

ஆன்லைன் போட்டிகளில் பங்கேற்பு

இப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாட வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும், சதுரங்க பயிற்சிகள் நடைபெற்று வருவதும் ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

மாணவர்கள் உற்சாக பேச்சு

மாணவர்கள் உற்சாக பேச்சு

வீட்டிலேயே கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்று பேசிய வீடியோக்களை YOUTUBE யில் காணலாம் :

காமராஜர் குறித்து கருத்துள்ள கவிதை சொல்லும் மாணவி கீர்த்தியா

https://www.youtube.com/watch?v=G-srOLkmKT4
காமராஜர் குறித்து கருத்துள்ள கவிதை சொல்லும் மாணவர் ஈஸ்வரன்
https://www.youtube.com/watch?v=BSu1hysfDV8
காமராஜர் குறித்து கருத்துள்ள கவிதை சொல்லும் மாணவர் வெங்கட்ராமன்
https://www.youtube.com/watch?v=0OL5NXSCIZQ
காமராஜர் குறித்து விரிவாக பேசும் மாணவர் சண்முகம்
https://www.youtube.com/watch?v=lhygCz3UacA

ஆன்லைனில் மாணவர்கள் பங்கேற்பு

ஆன்லைனில் மாணவர்கள் பங்கேற்பு

மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு உதவுவது ஆகும். பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை என்று கவலையோடு பலரும் இருக்கின்றனர். மாணவர்களுக்கு கல்வி பாதிக்காமல் இருக்க வீட்டிலேயே பாடம் படிக்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவது போல இதுபோன்ற போட்டிகளையும் ஆன்லைனில் நடத்துவது மாணவர்களுக்கு பள்ளியில் இருப்பது போன்ற சூழலை உருவாக்கும் என்கின்றனர் பெற்றோர்கள்.

English summary
Devakottai students celebrates at home Kalivi Valarchi day on Kamarajar 118th Birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X