புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபாநாயகர் எனக்கு நோட்டீஸ் அனுப்பாதது ஏன்.. வான்டட்டாக வம்பிழுக்கும் கருணாஸ்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: 3 எம்எல்ஏக்களுடன் சேர்த்து சபாநாயகர் எனக்கு நோட்டீஸ் அனுப்பாதது ஏன் என திருவாடாணை எம்எல்ஏ கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டையில் நடிகர் கருணாஸ் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில், எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது அரசியல் காரணம் தான். அரசு கொறடா கொடுத்து உள்ள குற்றச்சாட்டுகளும், அதற்கு 3 எம்.எல்.ஏ.க்கள் கொடுத்து உள்ள தன்னிலை விளக்கமும் முரண்பாடாக உள்ளது. அந்த 3 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து எனக்கு ஏன் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பவில்லை என எனக்கு தெரியவில்லை.

தகுதி நீக்கத்திற்கு வைத்த செக்.. சபாநாயகருக்கு எதிராக திமுக மூவ்.. ஸ்டாலினின் ராஜதந்திர திட்டம்! தகுதி நீக்கத்திற்கு வைத்த செக்.. சபாநாயகருக்கு எதிராக திமுக மூவ்.. ஸ்டாலினின் ராஜதந்திர திட்டம்!

அனுப்பவில்லை

அனுப்பவில்லை

ஆனால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் எனக்கு அனுப்பி இருந்தால் நான் என்ன செய்வேன் என்று அவர்களுக்கே தெரியும். அதனால் தான் அவர்கள் எனக்கு அனுப்பவில்லை.

சூழல்

சூழல்

தேர்தல்களில் அதிமுக வாக்கு வங்கி சரிவை சந்திக்கும் என்றால், அவர்கள் வைத்து உள்ள பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. ஆகியவற்றுடன் ஏற்பட்ட கூட்டணியே காரணம். சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவு வெளியான பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அப்போது உள்ள சூழலுக்கு ஏற்ப நான் முடிவெடுப்பேன் என்றார்.

தனபால்

தனபால்

அதிமுக எம்எல்ஏக்கள் விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுக கொறடா ராஜேந்திரன் அண்மையில் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.

வீடியோ

வீடியோ

அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் தினகரனுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் எடப்பாடி அரசுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்ததாகவும் கொறடா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்த வீடியோ, புகைப்படங்களை சபாநாயகர் தனபாலிடம் அவர் சமர்ப்பித்தார்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

இந்த நிலையில் "உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்ய கூடாது" என்று விளக்கம் கேட்டு, தனித்தனியாக மூன்று எம்எல்ஏக்களுக்கும், சபாநாயகர் தனபால் இன்று, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

7 நாட்கள்

7 நாட்கள்

பொதுவாக இது போல விளக்கம் கேட்கும் நோட்டீசுக்கு, பதில் அளிக்க, 15 நாட்கள் கால அவகாசம் தரப்படும். ஆனால் இந்த விஷயத்தில் 7 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அளிக்கும் பதில் திருப்தி அளிக்காவிட்டால் தகுதி நீக்கம் செய்யக் கூடிய அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.

கருணாஸ்

கருணாஸ்

இதுபோல் கருணாஸும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில் அவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
MLA Karunas asks why did Speaker not send notice for me for supporting TTV Dinakaran?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X