புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கையில் தங்க செயினுடன் வந்த "கிறிஸ்து".. மிரண்டு போன ஜெயில் அதிகாரிகள்.. வியக்கும் புதுக்கோட்டை!

தவறவிட்ட நகையை உரியவரிடம் ஒப்படைத்த ஆயுள் கைதிக்கு பாராட்டுக்கள் குவிகிறது

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: கையில் தங்க செயினுடன் வந்து கொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி கிறிஸ்துவை பார்த்ததும் ஜெயில் அதிகாரிகள் ஒரு செகண்ட் பதறிவிட்டனர்.. இதற்கு பிறகுதான் அவரது நேர்மையும், நாணயமும் பாராட்டை பெற்று வருகிறது.

யில் வாடிக்கையாளர் ஒருவர் தவற விட்டு சென்ற ஒன்றரை சவரன் தங்க நகையை சிறை துறையால் நடத்தப்படும் பெட்ரோல் பங்கில் பணியாற்றிவரும் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பத்திரமாக எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நிகழ்வு காண்போருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

Life prisoner handed over the jewelery left by its owner near Pudukottai

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.. இது சிறைத்துறை நிர்வாகத்தால் நடத்தப்படுவது.. அதனால், இந்த பெட்ரோல் பங்கில் ஆயுள் தண்டனை கைதிகள் மட்டுமே வேலை பார்த்து வருகிறார்கள்.. முழுக்க முழுக்க கைதிகள்தான் ஊழியர்களே!

இந்த பெட்ரோல் பங்கில் தினமும் ஏராளமானோர் வந்து தங்களுடைய வண்டிகளுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பி கொண்டு போவார்கள்.. எப்போதுமே பிஸியாக இருக்கும் பங்க் இது!

இந்நிலையில் சரவணன் என்பவர் தன்னுடைய பைக்கிற்கு பெட்ரோல் போட வந்துள்ளார்.. பெட்ரோல் நிரப்பி விட்டு சென்ற போது அவர் கழுத்தில் கிடந்த ஒன்றரை சவரன் தங்க நகை, அந்த இடத்திலேயே தவறி விழுந்துவிட்டது.. ஆனால் இது தெரியாத சரவணன் அங்கிருந்து பைக்கில் கிளம்பி சென்று விட்டார்.

பெட்ரோல் பங்கில் விழுந்து கிடந்த அந்த செயினை டியூட்டியில் இருந்த கிறிஸ்து ஆரோக்கியவர் என்பவர் பார்த்தார்.. இவர் ஒரு ஆயுள் தண்டனை கைதியாவார்.. அந்த செயினை எடுத்து கொண்டு போய், சிறைத்துறை அதிகாரிகளிடம் பத்திரமாக தந்தார்.. கையில் தங்க செயினோடு வந்த கிறிஸ்துவின் நேர்மையை அதிகாரிகள் பாராட்டினர்.. அந்த செயின் எப்படியும் 65,000 ரூபாய்க்கு மேல் இருக்குமாம்.

போதைப் பொருள் சர்ச்சை.. 'வாட்ஸ் அப்' ஆல் சிக்கிய தீபிகா படுகோன்!.. கங்கனா ரணாவத் செம்ம நக்கல்! போதைப் பொருள் சர்ச்சை.. 'வாட்ஸ் அப்' ஆல் சிக்கிய தீபிகா படுகோன்!.. கங்கனா ரணாவத் செம்ம நக்கல்!

இதற்கு பிறகு செயினை விட்டுச்சென்றது யார் என்ற விசாரணை ஆரம்பித்தனர்.. அதற்குள் பைக் சரவணன் பெட்ரோல் பங்கிற்கு வந்து தன்னுடைய செயினை காணோம் என்று சொல்லி கொண்டிருந்தார்.. இந்த தகவல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்றதையடுத்து, சரவணனிடம் செயின் ஒப்படைக்கப்பட்டது. ஆயுள் தண்டனை கைதி கிறிஸ்து ஆரோக்கியராஜுக்கு சிறை வளாகம் பாராட்டுக்களை அள்ளி வழங்கி வருகிறது.

"சிறைத்துறை ஒரு பாடசாலை" என்பது எவ்வளவு சத்தியமான உண்மை!

English summary
Life prisoner handed over the jewelery left by its owner near Pudukottai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X