புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயார்.. ஆனால் ஒரு கண்டிஷன்.. மக்கள் நீதி மய்யம்

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரசுடன் கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் வைக்கும் கண்டிஷன்- வீடியோ

    புதுக்கோட்டை: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார். ஆனால் அக்கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் கூட்டணிக்கான பேரங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

    கமல் கட்சியான மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து கமலிடம் கேட்டபோது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது என்றார்.

    தனித்தே

    தனித்தே

    இந்த நிலையில் ஆங்கில தொலைகாட்சி சேனலுக்கு அவர் பேட்டி அளித்த போது 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் தெம்பு தங்களுக்கு உண்டு. எனவே நாங்கள் தனித்தே போட்டியிடுகிறோம்.

    முரசொலி

    முரசொலி

    திமுகவின் ஊழல் பொதியை சுமக்க நாங்கள் தயாராக இல்லை என்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலின் இந்த விமர்சனத்துக்கு எதிராக முரசொலியில் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

    காரணம்

    காரணம்

    திமுக- காங்கிரஸுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டாததால் கமல் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதால், திமுக குறித்து அத்தகைய விமர்சனத்தை முன் வைத்ததற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.

    விளம்பரம்

    விளம்பரம்

    இந்த நிலையில் புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி பாடலாசிரியர் சினேகன் கூறுகையில் பாஜகவை வீழ்த்துவது என்பதே மக்கள் நீதி மய்யத்தின் விருப்பமாக உள்ளது. காங்கிரஸுடன் கூட்டணியில் இணைய வேண்டுமானால் அக்கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலக வேண்டும். டிடிவி தினகரன் கட்சி ஆரம்பித்துள்ளதே ஒரு விளம்பரத்துக்காகதானே என்றார்.

    English summary
    Makkal Needhi Maiam is ready to alliance with Congress. But that party has to leave from DMK Alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X