புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வான்கோழியால் தோகையை விரிக்க முடியாது.. ஒரு போதும் ஆண் மயிலாகாது.. அமைச்சரின் அடடே உவமை!

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: வான்கோழியால் தோகையை விரிக்க முடியாது என்று அமைச்சர் சி விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20-ஆம் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். இந்த ஜல்லிக்கட்டில் தனது புதிய காளையை களமிறக்க உள்ளார்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

நீண்ட தூரம் காளை ஒற்றைப் பாதையில் வேகமாக ஓடி களமிறங்கும்போது விபத்துகள் நேராமல் இருக்கும் வகையில் வாடிவாசல் அமைக்க அமைச்சர் உத்தரவிட்டார். இந்த ஆண்டு விராலிமலை ஜல்லிக்கட்டில் 2500 காளைகளை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொய் குற்றச்சாட்டுகள்

பொய் குற்றச்சாட்டுகள்

இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் முதல்வர் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.

எடுபடாது

எடுபடாது

முதல்வர் இந்த பொய் குற்றச்சாட்டுகளை முறியடிப்பார். இவரது குற்றச்சாட்டுகள் மக்கள் மன்றத்தில் ஒரு போதும் எடுபடாது. அதிமுக அழகிய தோகை விரித்தாடும் ஆண் மயில் போன்றது.

ஆண் மயில்

ஆண் மயில்

வான்கோழியை போன்ற சிலர் தோகையை விரித்து ஆட நினைத்தால் வேடிக்கையாகதான் இருக்கும். வான்கோழி ஒரு போதும் ஆண் மயிலாக முடியாது என்று அவர் கூறினார்.

நடவடிக்கை

நடவடிக்கை

விராலிமலையில் வரும் 20ஆம் தேதி உலக சாதனை படைப்பதற்காக நடத்தப்படவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு விழா குழு சார்பில் இன்சூரன்ஸ் செய்யப்படும். இதேபோன்று மாவட்டத்தில் நடக்கும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் விழா குழு சார்பில் மாடுபிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என்றார்.

English summary
Minister C.Vijayabaskar says that he will face the allegations in the issue of Kodanad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X