புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கார்த்தி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்.. ஆனா நம்ம எச் ராஜா அப்படியில்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: கார்த்தி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார். ஆனால் எச் ராஜாவை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடும் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கலந்து கொண்ட செயல்வீரர் கூட்டம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது.

நீங்க வருஷத்திற்கு ரூ.6000, நாங்க மாதத்துக்கு ரூ.6000! பாஜகவை வீழ்த்த காங். எடுத்த பிரம்மாஸ்திரம் நீங்க வருஷத்திற்கு ரூ.6000, நாங்க மாதத்துக்கு ரூ.6000! பாஜகவை வீழ்த்த காங். எடுத்த பிரம்மாஸ்திரம்

அதிமுக

அதிமுக

இதில் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட அதிமுக கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்டனர். செயல்வீரர் கூட்டத்தில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக கூட்டணியை அகில இந்திய அளவில் அனைவரும் திரும்பிப் பார்த்து வருகின்றனர்.

ராகுல் காந்தியை ஈர்க்க இதுதான் காரணம்.. வயநாடு தொகுதி, ஒரு பார்வை!

எச் ராஜா

எச் ராஜா

அதிமுக கூட்டணியை பார்த்து திமுக திக்குமுக்காடி வருகிறது.
40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

எச். ராஜா சிவகங்கை தொகுதியில் வெற்றி வேட்பாளராக உள்ளார். திமுக கூட்டணி சார்பில் ஓராயிரம் கார்த்தியை வேட்பாளராக நிறுத்தினாலும் எச். ராஜா வெற்றி பெறுவது உறுதி.

இதுவரை செய்யவில்லை

இதுவரை செய்யவில்லை

கார்த்தி சிதம்பரம் தற்போது (out of coverage) தொலை தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார். எனவே அவர் தோல்வி அடைவது உறுதி. கடந்த ஆண்டுகளில் ப. சிதம்பரத்தை சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போதிலும் தொகுதிக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை.

வல்லமை

வல்லமை

தொகுதி பக்கமே அவர் வரவில்லை.
பாஜக மத்தியில் ஆட்சியில் அமரும் போது சிவகங்கை தொகுதி வேட்பாளர் எச். ராஜா மத்திய அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போன்று நமது வேட்பாளர் எச் ராஜா 7 மொழிகளை பேசும் வல்லமை பெற்றவர் என்றார்.

English summary
Minister Vijayabaskar criticises P.Chidambaram and Karti Chidambaram as he is out of coverage area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X