புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்க வந்து காசு கேட்கிறே.. டோல்கேட் ஊழியர்களுடன் மோதல்.. கட்டையால் தாக்கிய நாம் தமிழர் நிர்வாகி!

சுங்க சாவடி ஊழியர்களை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சரமாரி தாக்கினார்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: சாவடியில் உருட்டு கட்டையை எடுத்து வந்து அடித்ததும் இல்லாமல், கட்டணமும் செலுத்த முடியாது என்று அடம் பிடித்துள்ளார் நாம் தமிழர் நிர்வாகி ஒருவர்.. ஆனால் சாவடி ஊழியர்களோ.. அவரை சுற்றி வளைத்து பிடித்து ஓட ஓட அடித்து விரட்டி இருக்கிறார்கள்!

சில வருஷங்களுக்கு முன்னாடி, நாம் தமிழர் கட்சியினருடன் சீமான் மதுரை திருமங்கலம் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த சுங்கச்சாவடியில் கட்டண வசூல் சம்பந்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது அன்றைய மீடியாக்களில் பெரும் விவாதமாகி, சர்ச்சையாகி, பரபரப்பை தந்தது.

சீமான் மட்டுமல்ல பல்வேறு அரசியல் கட்சியினரும் டோல்கேட் வசூலை கண்டித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர். பண்ருட்டி வேல்முருகனும் கூட போராட்டம் நடத்திப் பார்த்தார். ஆனால் கட்டண வசூல் நின்றபாடில்லை. . இதுபோன்ற தகராறுகளும் நிறைய சாவடிகளில் ஏற்பட்டு வருகின்றன. இப்போது கீரனூரில் நடந்துள்ளது.

உழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக!உழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக!

வினோத்குமார்

வினோத்குமார்

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி வினோத்குமார். இவர் போன எம்பி தேர்தலில் திருச்சி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர். அதனால் தொகுதிக்குள் பிரபலமும் ஆனவர்!

சுங்க சாவடி

சுங்க சாவடி

இந்நிலையில், திங்கட்கிழமை புதுக்கோட்டைக்கு செல்லும்வழியில் கீரனூர் சுங்கச்சாவடி வந்தது. அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளார். ஆனால், வினோத்குமார், நான் நாம் தமிழர் கட்சிவேட்பாளர் என்று சொல்லி கட்டணமும் செலுத்தாமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. பிறகு போன வேலையை முடித்து மீண்டும் அதேவழியில் திரும்பி வந்துள்ளார் வினோத்குமார்.

வட மாநிலத்தவர்

வட மாநிலத்தவர்

அப்போது கட்டணம் கேட்ட ஊழியர்களுடன் வினோத்குமார் வாக்குவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லை.. சுங்கச் சாவடி ஊழியர்களை வட மாநிலத்தவர்கள் என நினைத்து, "எங்க தமிழ்நாட்டுல வந்து சுங்க கட்டணம் வசூலிப்பியா" என்று கேட்டு உருட்டுக் கட்டையை எடுத்து வந்துவிட்டார் வினோத். அங்கிருந்த ஊழியர்களையும் சரமாரியாக வெளுத்தெடுத்ததாக சொல்லப்படுகிறது.

உருட்டுக் கட்டை

உருட்டுக் கட்டை

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஊழியர்கள் வினோத்தை விரட்டி பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் வினோத்தின் சட்டை கிழிந்துள்ளதாகவும், அதன்பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டதாகவும் தெரிகிறது. இப்போது வினோத் பலத்த காயம் அடைந்த நிலையில், புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை

சிகிச்சை

விஷயம் என்வென்றால், சுங்கச்சாவடிப் பணியில் இருந்த யாருமே வட மாநிலத்தவர் இல்லை.. எல்லாருமே தமிழர்கள்தான்.. இது தெரியாமல் உருட்டுக் கட்டையை தூக்கி அடிக்க வந்துவிட்டார் வினோத். இப்போது இருதரப்புமே போலீசில் தங்களை தாக்கியதாக புகார் சொல்லி உள்ளார்கள்

English summary
naam tamilar party trichy candidatte, has attacked keeranur tollgate staffs and admitted in the hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X