புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சங்கீதா"வுக்காக காத்து கிடந்து ஏமாந்து போன கியூ... 2 குரூப்.. கடும் வாக்குவாதம்.. ஒரே பரபரப்பு

புதிதாக திறக்கப்பட்ட மொபைல் கடை அறிவிப்பினால் பரபரப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

Recommended Video

    புதுக்கோட்டை.. செல்போன் கடை திறப்பு அறிவிப்பினால் பரபரப்பு-வீடியோ

    புதுக்கோட்டை: "சங்கீதா"வுக்காக காலையில் இருந்து கால் கடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர் மக்கள்.. ஆனால் கொஞ்ச நேரத்துலேயே ஏமாற்றம் அடைந்ததால், சண்டைக்கே போய்விட்டனர்.

    சங்கீதா என்ற புகழ்பெற்ற செல்போன் நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ளது. தமிழகமெங்கும் இதற்கு கிளைகள் உள்ள நிலையில், புதுக்கோட்டையில் புதிதாக இதன் கிளை திறக்கப்பட்டது.

    திறப்பு விழா சலுகையாக 200 ரூபாய்க்கு செல்போன் வரப்போவதாக விளம்பரம் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு பரபரப்பாக அந்த பகுதியில் பேசப்பட்டது.

    அப்படி ஒரு கால்.. இப்படி ஒரு கால்.. விஜயகாந்த் மாதிரி.. சபாஷ் சப் இன்ஸ்பெக்டர்அப்படி ஒரு கால்.. இப்படி ஒரு கால்.. விஜயகாந்த் மாதிரி.. சபாஷ் சப் இன்ஸ்பெக்டர்

    வரிசை

    வரிசை

    அதற்காக காலங் காத்தாலேயே கடை முன்பு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டார்கள். சம்பந்தப்பட்ட கடைக்காரர் வருவதற்கு முன்பேயே மக்கள் கியூவில் நின்றார்கள். ஆனால் பத்து பேருக்கு மட்டும் 200 ரூபாய்க்கு செல்போன் தருவதாக கூறிவிட்டு, மீதமுள்ளவர்களுக்கு கிடையாது என்று அந்த கடையில் பணியாற்றும் ஊழியர்கள் சொன்னார்கள்.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    காலையில் இருந்து சாப்பாடு தண்ணி இல்லாமல் காத்து கிடந்தால், இப்படி செல்போன் இல்லை என்று சொல்லி விட்டார்களே என பொதுமக்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைக்கார ஊழியர்களும் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.

    போராட்டம்

    போராட்டம்

    இந்த பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போதே, இன்னொரு க்ரூப் அங்கே வந்தனர். அவர்கள், புதுக்கோட்டை மாவட்ட செல்போன் கடை உரிமையாளர் சங்கத்தினராம். 200 ரூபாய்க்கு செல்போன் தரக்கூடாது என்று சுமார் 50க்கும் மேற்பட்டோர் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். இதனையடுத்து "200 ரூபாய்க்கு செல்போன் கிடையாது.. அதே செல்போன் 400 ரூபாய்" என்று சொன்னார்கள்.

    விளம்பரம்

    விளம்பரம்

    ஒருபக்கம் செல்போன் தர வேண்டும் என்று வாக்குவாதம், இன்னொரு பக்கம் செல்போன் தரரக்கூடாது என்ற வாக்குவாதம்.. இதனால் அந்த இடமே பரபரப்பானது. இந்த பரபரப்பிலேயே கடைக்கு விளம்பரம் ஆட்டோமேட்டிக்காக வந்து சேர்ந்துவிட்டது!

    English summary
    One Cellphone for 200 Rupee sell by a New Mobile shop in Pudukottai and public disappointed with
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X