புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொன்னமராவதி சர்ச்சை ஆடியோ… கலிஃபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடிதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Ponnamaravathi News: பொன்னமராவதியில் கலவரம்.. 1,000 பேர் மீது வழக்குப்பதிவு- வீடியோ

    புதுக்கோட்டை: பொன்னமராவதி சர்ச்சை ஆடியோவை வெளியிட்டவர்களின் தகவல் கோரி அமெரிக்காவின், கலிஃபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புதுக்கோட்டை காவல்துறை கடிதம் எழுதி உள்ளது.

    ஒரு சமூகத்தினரின் பெண்கள் பற்றிய அவதூறு வாட்ஸ்அப் ஆடியோவால் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது.அவதூறு வாட்ஸ்அப் ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று முன்தினம் போராட்டம் வெடித்தது.

    Ponnamaravathi dispute audio, Pudukottai police letter to whats app

    மாம்பழம் சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு... கடலூர் அருகே பதற்றம் மாம்பழம் சின்னம் வரைந்திருந்த வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு... கடலூர் அருகே பதற்றம்

    மேலும், பொன்னமராவதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தின்போது பொன்னமராவதி காவல்நிலையம், போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன.

    மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் கலவரம் பரவுவதை தடுக்க, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மதுப்பான கடைக்ள் மூடப்பட்டன. மேலும், புதுக்கோட்டையில் பேருந்துகள் 80 சதவீதம் இயக்கப்படவில்லை.

    பிரச்னை தொடராமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், மோதலுக்கு காரணமான சர்ச்சைக்குரிய வாட்ஸ் அப் வெளியிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இது குறித்த முழுமையான விசாரணைக்காக, அமெரிக்காவின், கலிஃபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புதுக்கோட்டை காவல்துறை கடிதம் எழுதி உள்ளது. இதில், கிடைக்கும் தகவலின் படி, நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.

    English summary
    Pudukottai police letter to whats app Regarding to Ponnamaravathi dispute audio
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X