புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாயில நுரை துள்ளுது.. நடுரோட்டில் வலிப்பு... எப்படிங்க பார்த்துட்டு பேசாம போறது.. சபாஷ் டாக்டர்!

நடுரோட்டில் வலிப்பு வந்த இளைஞரை டாக்டர் காப்பாற்றி உள்ளார்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: "வாயில நுரை துள்ளுது.. நடுரோட்டில் வலிப்பு வந்துச்சு... உயிருக்கு போராடுகிறார்.. எப்படிங்க பார்த்துட்டு பேசாம போறது.. அதான் உதவி செய்தேன்" என்று உயிருக்கு போராடிய இளைஞருக்கு முதலுதவி செய்த டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆலங்குடி, தவலைப்பள்ளம் சாலை வழியாக பெரியசாமி என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார்.. இவர் ஒரு டாக்டர்... வழியில் ஒரு இளைஞர் வலிப்பு நோயால் துடித்து கொண்டிருப்பதை பார்த்தார்.. நடுரோட்டிலேயே கீழே விழுந்து.. நுரை தள்ளிய நிலையில் கிடந்தார்.

pudukkottai doctor saves young man from epilepsy

இதை பார்த்ததும் டாக்டர் காரை நிறுத்த சொல்லி, அந்த இளைஞருக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றினார். அதன்பிறகு ஆம்புலன்ஸை வரவழைத்து மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தார். இந்த டாக்டருக்குதான் இப்போது பாராட்டு குவிகிறது.

இதை பற்றி அவர் சொல்லும்போது, "நான் இந்த ரோட்டில் வந்திருக்க மாட்டேன்.. டிராபிக் அங்கு அதிகமாக இருக்கும் என்பதால், இந்த வழியில் காரில் வந்தேன்.. எப்பவுமே நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை தருவேன்.. இன்னைக்கு ரோட்டில் வைத்து சிகிச்சை கொடுத்தேன். அவ்வளதுதான்..

ஆனால் நான் வரும்போது, ஒருசிலர் இந்த பக்கமாக போனார்கள்.. அந்த இளைஞனை பார்த்து கொண்டே போனார்களே தவிர அவருக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.. அதை பார்க்கும்போதுதான் கஷ்டமாக இருந்தது.. டாக்டர் மட்டும்தான் இப்படி முதலுதவி தரணும்னு இல்லை.. பொதுமக்களும் இப்படி முதலுதவி செய்யலாம்.. அந்த இளைஞர் ரொம்ப போராடிட்டு இருந்தார்.. மூச்சுகூட விடமுடியவில்லை.. சுயநினைவும் இல்லை.

மெய்யப்பன் தாலி கட்டி கொஞ்ச நேரம் கூட ஆகலை... அதுக்குள்ள பெண்ணை கடத்திய கும்பல்.. ஈரோட்டில் ஷாக்மெய்யப்பன் தாலி கட்டி கொஞ்ச நேரம் கூட ஆகலை... அதுக்குள்ள பெண்ணை கடத்திய கும்பல்.. ஈரோட்டில் ஷாக்

இப்படி இருந்தால், உடனடியாக அந்நபரை ஒரு பக்கமாக படுக்க வைத்து, மேல் காலை மடக்கி கீழே சாயாத அளவுக்கு வைத்து, கழுத்தை மேல் நோக்கி தூக்கி தலையை நன்றாக பிடித்துக்கொள்ள வேண்டும். அப்போது வாய் நுரை மெல்ல மெல்ல வெளியே வந்தபடியே இருக்கும்.. காற்றும் உள்ளே போகும்... அப்போதுதான் மூச்சு எளிதாக விட முடியும்... இதைதான் இந்த இளைஞருக்கும் செய்தேன். இப்போ அவர் ஆஸ்பத்திரியில் நல்லா இருக்காராம்.. அவர் சொந்தக்காரங்க எனக்கு போன் பண்ணி சொன்னாங்க.. கேட்கவே சந்தோஷமா இருக்கு என்றார்.

English summary
pudukkottai doctor saves young man from epilepsy and public praise the doctor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X