• search
புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

7 வயது சிறுமியை வெறிநாய் போல கடித்து குதறிய காமுகன்.. பகீர் வாக்குமூலம்.. பதறும் புதுக்கோட்டை

|

புதுக்கோட்டை: 7 வயது குழந்தையின் உடம்பெல்லாம் வெறிநாய் போல கடித்து கடித்து குதறி வைத்திருந்தானாம் காமுகன் ராஜா.. அந்த வலி தாங்க முடியாமல்தான் குழந்தை கத்தியிருக்கிறாள்.. அவள் சத்தம் போடவும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை அறுத்துவிட்டு, சடலத்தை கண்மாய் நடுவில் உள்ள செடிகளில் மறைத்து, அதற்கு மேல் புதர்களையும் அள்ளி போட்டு நிரப்பி மறைத்ததாக புதுக்கோட்டை போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளான் இக்கொடூரன் ராஜா.. இந்த வாக்குமூலத்தை கேட்டு, தமிழக மக்கள் மேலும் ஆத்திரமும், கோபமும் அடைந்துள்ளனர்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது ஏம்பல் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்த ஒரு தம்பதியரின் 7 வயது மகள் அங்கிருந்த பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறாள்.. கடந்த 29-ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாள்.

pudukottai 7 year old girl rape case issue: #JusticeforJayapriya:

ஆனால் திடீரென அவளை காணோம்.. அதனால் சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றிருப்பாள் என்று வீட்டில் நினைத்தனர். இரவு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.. அதனால்தான் சந்தேகப்பட்டு சொந்தக்காரர் வீடுகளுக்கு சென்று தேட ஆரம்பித்தனர்.

ஆனால் சிறுமி கிடைக்கவில்லை.. ஒருவேளை கடத்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் வரவும், ஏம்பல் போலீஸாரிடம் சிறுமியைக் காணவில்லை எனப் புகார் தந்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து தேடிவந்தனர்.

1-ம் தேதி சாயங்காலம் அவர்களின் வீட்டிற்கு அருகே சிறுமியின் சடலம் கிடந்தது.. கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய் கரையில் கொடிகள் படர்ந்த இடத்தில் சிறுமி சடலம் பொதிந்து கிடந்தது.. உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.. உடம்பில் துணியே இல்லாமல் கிடந்தாள்.. அப்போதுதான் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி இருப்பதையும், அதனாலேயே குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளாள் என்பதையும் கண்டு போலீசார் அதிர்ந்தனர்.

விசாரணை ஆரம்பமானது. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.. அந்த நாய் கண்மாய் கரை பகுதியெல்லாம் சுற்றிவிட்டு, கடைசியாக ஒரு வீட்டின் முன்பு வந்து படுத்து கொண்டது.. அப்போதுதான் அந்த வீட்டில் உள்ள ராஜா என்பவரை பிடித்து விசாரித்தனர்.. அவருக்கு 29 வயது.

விசாரணையில் சிறுமியை தான்தான் பலாத்காரம் செய்ததாகவும், பிறகு அடித்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். ராஜா ஒரு பூ வியாபாரியாம்.. சிறுமியின் அப்பா ஒரு கூலி தொழிலாளி.. தினமும் வேலைக்கு போனால்தான் சாப்பாடு என்கிற நிலை.. இவரது தாயோ மனநலம் பாதிக்கப்பட்டவர்.. அதனால், அந்த தாயை கவனித்து கொள்ள வேறு ஆட்களும் இல்லை என்பதால், இந்த 7 வயது குழந்தைதான் அவரையும் கவனித்து கொண்டு இருந்திருக்கிறாள்!

மீண்டும் ஒரு சிறுமி.. ரத்த காயங்களுடன் குளத்தில் சடலமாக.. அதிர்ச்சியாக உள்ளது.. முக ஸ்டாலின் வேதனை

வீட்டு நிலைமையை நன்றாக தெரிந்து கொண்ட பூ வியாபாரி, இதைதான் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளான்.. சிறுமிக்கு நிறைய ஸ்வீட், நொறுக்கு தீனிகளை வாங்கி தந்தே தன்னுடன் பாசமாக பழக

வைத்துள்ளான்.. அதனால்தான் சம்பவத்தன்றுகூட தனியாக ராஜா கூப்பிடும்போது, சிறுமி மறுப்பேதும் சொல்லாமல் நம்பி சென்றாள்.

உடம்பெல்லாம் வெறி பிடித்த நாய் போல கடித்து வைத்திருந்தானாம். அந்த வலி தாங்க முடியாமல்தான் குழந்தை கத்தியிருக்கிறாள்.. அதனால்அவள் சத்தம் போடவும், உடனே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை அறுத்துவிட்டு, அந்த சடலத்தை கண்மாய் நடுவில் உள்ள செடிகளில் மறைத்து, அதற்கு மேல் புதர்களை அள்ளி போட்டு நிரப்பி மறைத்துள்ளான்.

போலீசாரும், குடும்பத்தினரும், ஊர் மக்களும் சிறுமியை தேடி கொண்டிருந்ததால், இந்த ராஜாவும் அவர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடினானாம். இப்போது போலீசார் இந்த காமுகனிடம் ஒவ்வொரு விஷயத்தையும் கறந்து கொண்டிருக்கிறார்கள்.. நிறைய செக்ஸ் வீடியோவை பார்ப்பானாம் ராஜா.. பூ வியாபாரம் முடித்துவிட்டால், இந்த வீடியோதான் கதியாம்.. இதுதான் சிறுமியை பலாத்காரம் செய்ய தூண்டியது என்று வாக்குமூலம் தந்துள்ளான்..

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
pudukottai 7 year old girl rape case issue: #JusticeforJayapriya:
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X