புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிராமம்.. விவசாய குடும்பம்தான்.. படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் மேலே வந்துடும்.. உதாரணம் பொன்மணி

சித்த மருத்துவ நீட் தேர்வில் புதுக்கோட்டை மாணவி முதலிடம் பெற்றார்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: கிராமம்தான்.. விவசாய குடும்பம்தான்.. ஆனாலும் படிக்கற பிள்ளைங்க எங்க இருந்தாலும், எப்படி இருந்தாலும்.. படிச்சி மேல வந்துடுவாங்கன்றதுக்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம்தான் பொன்மணி!

யார் இந்த பொன்மணி.. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூகனூர் கிராமத்தை சேர்ந்த பொன்கணேசன்-ஜெயசுதா தம்பதியரின் மூத்த மகள் தான் பொன்மணி. 12ம் வகுப்பு வரை சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார் பொன்மணி.

2012-ல் பிளஸ் 2-வில் 1062 மார்க் வாங்கி ஸ்கூலில் 2-வது இடத்தை பிடித்தார். சின்ன வயசில் இருந்தே டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை. அது முடியாம போச்சு. பல் டாக்டருக்கு படிக்கலாம்னு பார்த்தால் அதுவும் முடியாம போச்சு. கடைசியில் சித்த மருத்துவம் படிக்கலாம்னு முடிவு பண்ணி 2013-ம் வருஷம் சேலத்தில் உள்ள பிரைவேட் காலேஜில் படிச்சார்.

ஏய்.. இன்னா.. சுடட்டா.. ஐயா நான் ரவுடி இல்லைங்க.. அது பொம்மை துப்பாக்கிங்கய்யா.. பல்டி அடித்த கபாலி ஏய்.. இன்னா.. சுடட்டா.. ஐயா நான் ரவுடி இல்லைங்க.. அது பொம்மை துப்பாக்கிங்கய்யா.. பல்டி அடித்த கபாலி

 முதலிடம்

முதலிடம்

இப்போ 5 வருஷம் மருத்துவ படிப்பு முடித்துவிட்ட பொன்மணி, பட்ட மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதி உள்ளார். ரிசல்ட் வந்தபிறகுதான் தெரிந்தது.. தேர்வு முடிவில் பொன்மணி 400க்கு 377 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது!

 இனிப்பு

இனிப்பு

இந்திய அளவில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி பொன்மணியின் பெற்றோர்கள், உறவினர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

 விவசாய கடன்

விவசாய கடன்

மகள் முதலிடம் பிடித்ததை பற்றி அவரது குடும்பத்தினர் சொல்லும்போது, "விவசாய குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு 2 பொண்ணுங்க. சின்ன வயசில் இருந்தே பொன்மணி நல்லா படிப்பாள். டாக்டருக்கு பொன்மணியால் படிக்க முடியாம போச்சு. சித்த மருத்துவத்தில் சேர்ந்து படிச்சாள். பொன்மணி படிக்கும்போது கடன் வாங்கிதான் படிக்க வெச்சோம். விவசாயமும் பொய்த்து போய்விட்டது. அதனால பேங்கில் வாங்கின கடனை கூட திருப்பி கட்ட முடியல. இப்போ வெற்றி பெற உழைத்த எல்லா ஆசிரியர்களுக்கும் என் நன்றி என்கிறார்.

 பூரிப்பு

பூரிப்பு

கல்வியில் ஆண் பிள்ளைகளுக்கு இணையாக தன் பெண்ணையும் படிக்க வெக்கணும்னுதான் பொன்மணி தம்பதியினர் ஆசைப்பட்டனர். ஆனால் இன்று தங்கள் மகள் நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளதை நினைத்து ஆனந்த கண்ணீரில் தத்தளித்தும், திக்குமுக்காடியும் போய் உள்ளனர் பொன்மணியின் அம்மாவும், அப்பாவும்!

English summary
Pudukottai Student Ponmani got First Rain in Neet for AYUSH postgraduate medical examination 2019
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X